டில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன், மத்திய அரசு, எட்டு சுற்று பேச்சு நடத்தியும், தீர்வு ஏற்படாதது பெரும் கவலையளிக்கிறது. சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற்று, விவசாயிகள் போராட்டத்துக்கு முடிவு காண, மத்திய அரசு முன் வர வேண்டும்.
- மாயாவதி தலைவர், பகுஜன் சமாஜ்
அனைவருக்கும் இலவசம்!
இந்த நுாற்றாண்டின் மிகப் பெரிய தொற்று நோயாக, கொரோனா அமைந்துள்ளது. இதிலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டியது, அரசுகளின் கடமை. அதனால், நாட்டு மக்கள் அனைவருக்கும், கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்க, மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
- அரவிந்த் கெஜ்ரிவால், டில்லி முதல்வர், ஆம் ஆத்மி
ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்!
அமெரிக்க அதிபர் டிரம்பின், 'டுவிட்டர்' கணக்கு முடக்கப்பட்டுள்ளது; இது, ஜனநாயக நாடுகளுக்கு, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களால் ஏற்பட உள்ள அச்சுறுத்தலுக்கு, ஒரு எடுத்துக்காட்டு. தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை, மத்திய அரசு விரைவாக சீராய்வு செய்வது, ஜனநாயகத்துக்கு நல்லது.
- தேஜஸ்வி சூர்யாஎம்.பி., - பா.ஜ.,
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE