பொது செய்தி

தமிழ்நாடு

முதுமலை மீண்டும் திறப்பு சுற்றுலா பயணியர் மகிழ்ச்சி

Added : ஜன 10, 2021
Share
Advertisement
கூடலுார்: முதுமலை புலிகள் காப்பகத்தில், ஒன்பது மாதங்களுக்கு பின், சுற்றுலா பயணியருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, மார்ச், 15ல் மூடப்பட்டது. ஒன்பது மாத இடைவெளிக்கு பின், நேற்று முதுமலை திறக்கப்பட்டு, சுற்றுலா பயணியர் அனுமதிக்கப்பட்டனர். கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்றி, சுற்றுலா பயணியர் வாகன
 முதுமலை மீண்டும் திறப்பு சுற்றுலா பயணியர் மகிழ்ச்சி

கூடலுார்: முதுமலை புலிகள் காப்பகத்தில், ஒன்பது மாதங்களுக்கு பின், சுற்றுலா பயணியருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, மார்ச், 15ல் மூடப்பட்டது. ஒன்பது மாத இடைவெளிக்கு பின், நேற்று முதுமலை திறக்கப்பட்டு, சுற்றுலா பயணியர் அனுமதிக்கப்பட்டனர். கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்றி, சுற்றுலா பயணியர் வாகன சவாரி சென்றனர். தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டது.

முதுமலை புலிகள் காப்பக அலுவலர்கள் கூறுகையில், 'அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி, 50 சதவீத பயணியர் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். 'யானைகளுக்கு உணவு அளிப்பதை பார்வையிட, ஒரு முறை, 30 சுற்றுலா பயணியர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். நாளை முதல், வனத்துறை விடுதிகள் திறக்கப்படும். யானை சவாரியும் துவங்கும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X