மதுரை: ''தன் கட்சி தொண்டர்களையே காப்பாற்றாத ஸ்டாலினா, தமிழகத்தை காப்பாற்றப் போகிறார்,'' என மதுரையில் பா.ஜ., செய்தி தொடர்பாளர் குஷ்பு கூறினார்.
நம்ம ஊர் பொங்கல் விழாவில் பங்கேற்க வந்த, குஷ்பு அளித்த பேட்டி:பா.ஜ., எங்கு இருக்கிறது என எதிர்க்கட்சிகள்,இனி கேள்வி எழுப்ப முடியாது. அந்தளவுக்கு ஒவ்வொரு தெருவிலும், பா.ஜ., கொடி பறக்கிறது. 2021 தேர்தலில், பா.ஜ., வெற்றியை எல்லோரும் காண்பர்.சட்டசபை தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து, டில்லி தலைமை முடிவு செய்யும்.
யாரை எதிர்த்து போட்டியிட தலைமை கூறினாலும், அது ஸ்டாலினாக இருந்தாலும், அவரை எதிர்த்து போட்டியிடுவேன்.தி.மு.க., தலைவராக இருந்த கருணாநிதி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை, 'ஜெயலலிதா அம்மையார்' என்று தான் விமர்சிப்பார். ஆனால், அவரதுகுடும்பத்திலிருந்து வந்த உதயநிதி, பெண்களுக்கு எதிராக பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என, எதிர்க்கட்சியினரான தி.மு.க.,வினர் பேச அருகதையில்லை. தி.மு.க.,வில் நான் இருந்த போது, என் வீட்டில் கல் வீசியதை கூறிய போது, தற்போதைய தி.மு.க., தலைவரான ஸ்டாலின், 'சாப்பிட்டு கொண்டிருக்கிறேன். இப்போது சென்று பார்க்க முடியாது' என்றார். அவரா இந்த நாட்டை காப்பாற்றப் போகிறார்; தமிழகத்தை காப்பாற்ற போகிறார்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE