மும்பை : 'பிஎம் கேர் நிதி தொடர்பான, சீராய்வு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' என, மஹாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் உள்ள மும்பை உயர் நீதிமன்ற கிளையில், மத்திய அரசு மனுதாக்கல் செய்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவியபோது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், பிஎம் கேர் என்ற நிதியம் உருவாக்கப்பட்டது. இந்த நிதி தொடர்பான தகவல்களை அளிக்கும்படி, அரவிந்த் வாக்மாரே என்ற வழக்கறிஞர், மும்பை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். 'பொது அறக்கட்டளை சட்டத்தின் கீழ், இந்த நிதி வருவதால், உரிய முறையில் விண்ணப்பித்து தகவல் பெறலாம்' என, அந்த மனுவை, நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.'பிஎம் கேர் நிதி, டில்லி யில் பதிவு செய்ப்பட்டுள்ளது. பொது அறக்கட்டளை சட்டம், டில்லிக்கு பொருந்தாது. அதனால், நிதி தொடர்பான தகவல்களை அளிக்க உத்தரவிட வேண்டும்' என, அரவிந்த் வாக்மாரே சார்பில் சீராய்வு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, பிரதமர் அலுவலகத்தின் சார்பு செயலர், பிரதீப் ஸ்ரீவத்சவா, பதில் மனுதாக்கல் செய்துள்ளார்.அதில் கூறப்பட்டுள்ள தாவது:பிஎம் கேர் நிதியின், 2019 - 2020ம் ஆண்டுக்கான வரவு - செலவு கணக்குகள், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அதனால், இந்த சீராய்வு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE