பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையருக்கு பாராட்டு விழா

Added : ஜன 10, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், இணை ஆணையர் ஜெயராமனுக்கு நேற்று பாராட்டு விழா நடந்தது.திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணை ஆணையராக, 2014ம் ஆண்டு மே மாதம், ஜெயராமன் பொறுப்பேற்றார். மாறுதல்ஹிந்து சமய அறநிலையத் துறை மற்றும் கோவில் அறங்காவல் குழு உதவியுடன், 2015ம் ஆண்டு, ரெங்கநாதர் கோவிலை பழமை மாறாமல் புதுப்பித்து, சம்ப்ரோஷணம் செய்ய நடவடிக்கை எடுத்தார்.
 ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையருக்கு பாராட்டு விழா

திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், இணை ஆணையர் ஜெயராமனுக்கு நேற்று பாராட்டு விழா நடந்தது.திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணை ஆணையராக, 2014ம் ஆண்டு மே மாதம், ஜெயராமன் பொறுப்பேற்றார்.

மாறுதல்

ஹிந்து சமய அறநிலையத் துறை மற்றும் கோவில் அறங்காவல் குழு உதவியுடன், 2015ம் ஆண்டு, ரெங்கநாதர் கோவிலை பழமை மாறாமல் புதுப்பித்து, சம்ப்ரோஷணம் செய்ய நடவடிக்கை எடுத்தார். இதற்காக, அவருக்கு 'யுனெஸ்கோ' விருது வழங்கப்பட்டது. கோவில் சேவை மண்டபம் முழுதும் குளிர் சாதனம் பொருத்தி, பங்குனி உத்திரத்தன்று நடைபெறும் சேர்த்தி சேவையை தரிசிக்கும் பக்தர்களின் சிரமத்தை தவிர்த்தார். ரெங்கநாதர் கோவிலை மங்களாசாசனம் செய்த ராமனுஜரின், 1,000 மாவது திருநட்சத்திர விழாவை சிறப்பாக நடத்தினார்.

கோவிலை பற்றிய புத்தகங்களையும், காலண்டரையும் வெளியிட்டார். சுமார், 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்க நடவடிக்கை எடுத்தார்.ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக, ரெங்கநாதர் கோவிலில், இணை ஆணையராக இருந்து, திருப்பணிகளை சிறப்பாக செய்த ஜெயராமன், கல்வி நிறுவனங்கள் மற்றும் காப்பகங்களின் ஆணையராக பதவி உயர்வுடன் பணி மாறுதலாகி செல்கிறார்.

நன்றி

அவருக்கு, நேற்று, ஸ்ரீரங்கத்தில் பாராட்டு விழா மற்றும் பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது. அதில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு கோவில் நிர்வாகங்கள் சார்பில், மரியாதை செய்து, நன்றி தெரிவிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anand G Raj - Male,மாலத்தீவு
11-ஜன-202100:10:45 IST Report Abuse
Anand G Raj அறமற்ற துறை எனும் போர்ஜரி துறை அழியாத வரை சர்வநிச்சயமாக இந்து மதம் உருப்படாது. சர்வவிதத்திலும் இந்து மதத்தை அழித்து ஒழிக்கவே இந்த துறை. சாத்திரம் சட்டம் எல்லாத்தையுமே ஏமாற்றும் 420 துறை. உள்ளூர் மக்களை எல்லா ஊரிலும் கோவில்களை விட்டு நகர்த்துவது அர்ச்சகருக்குள் வம்பு மூட்டுவது தருமகருத்தாக்களுக்குள் கலகம் உள்துறை பணிகளை ஒழித்தது என 65 ஆண்டுகளாக ஆலயங்களின் புற்று நோயாக வந்த இந்த கொராணாவை விட கொடிய மாபாதக துறையை விரைவில் அழிக்க வேண்டும் ஆஞ்சநேய கடவுளே. மக்களுக்கு எந்த வித ஆன்மீக அறிவும் இல்லை. அர்ச்சகருக்கு வெளிஉலகமோ சட்டமோ தெரியவில்லை.பாவம் உள்துறை விஷயம் தெரிந்த ஊழியர்களை அழித்து கட்சிகாரன் சாதிக்காரன் என அரசியல் சார்ந்து அரசியலால் வந்த கட்சிகார தகுதியற்ற அறமற்ற அறங்காவலர் குழுக்கள் அனைத்து ஆலயங்களிலும் சேர்த்து விட்டுகுளறுபடி செய்துவிட்டுள்ளனர். ஒரே இடியாப்ப சிக்கல்கள். சர்வத்ர அதர்மம் சர்வதா தர்ம நாசம் என்பதே இந்த துறை. அது மட்டுமல்ல ஈஓ எனும் மாபாவிகள் சட்டத்தை மதிக்காமல் செயல் படுகின்றனர். கேட்டால் யாரை எப்படி சமாளிப்பது என்ற கோல்மால் ஆசாமிகளாக இருப்பது இந்த செயல் அலுவலர்களுக்கே உள்ள தனி ஸ்பெஷாலிட்டி. ஊழியர்களின் மற்றும் மக்களின் அறியாமை வறுமை இயலாமைபயன்படுத்தி ஆலய ஊழியர்களை பிரித்து மேய்கிறது அதிகாரம். ஊழியர்களும் அதிகாரிகளும் நாத்திக கம்யூனிஸ்டு திராவிட மூட கும்பலாகவே பொதுவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சி செய்தால் புரியும். பூசை திருவிழா குடமுழுக்குகள் பற்றி தெரியாத மக்கள் ஏமாந்து காணிக்கையாக பணம் வரும்வரை முதலீடு இல்லாமல் இந்து ஆலயங்களை மட்டுமே வைத்து தவறுகளை பெருக வைத்து மொழி இனம் என கிளரி விட்டு இந்த 420 துறை கொள்ளையடிக்கவே செய்யும்.
Rate this:
Cancel
Anand G Raj - Male,மாலத்தீவு
11-ஜன-202100:06:43 IST Report Abuse
Anand G Raj ஸ்ரீரங்கம் கோவில் அர்ச்சகர்ளுக்கு மேல் நல்ல நிற்வாகஸ்தர்கள் கண்காணிக்க அதிகாரிகள் காசாசை இல்லாத நீதி தர்ம்சாஸ்திரம் சந்த்யா வந்தனம் நித்யகர்மா கற்றவர்களாக இருந்தால் நல்ல நிர்வாகியாக தேர்தல் நடத்தி கோவில் நிர்வாகம் அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்
Rate this:
Cancel
gopalasamy N - CHENNAI,இந்தியா
10-ஜன-202121:08:46 IST Report Abuse
gopalasamy N ஸ்ரீரங்கம் கோயில் சிறந்த ஆபிசர் இழந்தது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X