நாகர்கோவில்: கன்னியாகுமரி கடற்கரை கடைகளில், நேற்று நிகழ்ந்த தீ விபத்தில், 63 கடைகள் சேதமடைந்தன. குமரி கடற்கரையில் பகவதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் நிரந்தர மற்றும் தற்காலிக கடைகள் உள்ளன.
பேன்சி, விளையாட்டு பொருட்கள், ரெடிமேட் ஆடைகள் விற்கப்படும். நேற்று காலை, 3:00 மணி அளவில், காந்தி மண்டபம் பின்புறம் உள்ள ஒரு கடையில் இருந்து புகை வந்தது.சிறிது நேரத்தில் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.காற்று வேகமாக வீசியதால் அருகிலுள்ள கடைகளுக்கும் பரவியது.தீ எரியும் போது இங்குள்ள சிறிய ஓட்டல்களில் இருந்த கியாஸ் சிலிண்டர்கள் வெடித்தது, தீயணைப்பு வீரர்களுக்கு பெரும் சவாலாக இருந்தது. 60 வீரர்கள் தொடர்ந்து தண்ணீர் பீய்ச்சியடித்து காலை, 8:00 மணிக்கு தீயை முழுமையாக அணைத்தனர்.
கடைகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்தன. காந்தி மண்டபத்தின் பின்புறம், 38 கடைகள், கடற்கரை பகுதியில், 21 கடைகள், சங்கராச்சாரியார் மடம் அருகில் நான்கு கடைகள் என, 63 கடைகள் முழுமையாக சேதமடைந்தன. 2012ல், இதுபோன்று பெரிய தீ விபத்து ஏற்பட்டது. அதில், 30 கடைகள் சேதமடைந்தன. தீ விபத்துக்கு மின்கசிவு காரணம் என, முதற்கட்ட விசாரணையில் தெரிந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE