விஜயவாடா : சட்டவிரோத நில விற்பனை தொடர்பான விசாரணைக்கு ஆஜராகக் கோரி, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு, அமலாக்கத் துறை, 'சம்மன்' அனுப்பியுள்ளது. ஆந்திராவில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆட்சி நடக்கிறது.
ஜெகன்மோகன் ரெட்டியின் தந்தை ராஜசேகர ரெட்டி, ஆந்திர முதல்வராக இருந்தபோது, ஜெகனின் பல்வேறு நிறுவனங்களில் முறைகேடாக சொத்துக்கள் சேர்க்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது பற்றி, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இந்த வழக்கில், ஜெகன்மோகன் ரெட்டி கைது செய்யப்பட்டு, சிறையில் இருந்தார்; பின், ஜாமினில் வந்தார். ஜெகன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், ஆந்திராவில் உள்ள மருந்து நிறுவனம் ஒன்றுக்கு, கடந்த, 2004 - 09ம் ஆண்டில், மிக குறைந்த விலையில், 75 ஏக்கர் அரசு நிலம் விற்கப்பட்டுள்ள புகாரும் அடங்கும்.இந்த வழக்கு தொடர்பாக, நம்பள்ளி மாவட்ட நீதிமன்றத்தில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, அவரது கட்சியைச் சேர்ந்த எம்.பி., விஜய சாய் உட்பட ஆறு பேர் மீது, சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்த வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்துள்ளதால், இது பற்றி விசாரிக்க, அமலாக்கத் துறைக்கு, நம்பள்ளி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, வரும், 11ல், நேரில் ஆஜராகக் கோரி, முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, விஜய் சாய் ரெட்டி உட்பட ஆறு பேருக்கு, அமலாக்கத் துறை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE