மூணாறு: கேரளா இடுக்கி கட்டப்பனையில் கஞ்சா எண்ணெய் கடத்திய வழக்கில் நான்கு பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து மாவட்ட போதை பொருள் தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இங்கு ரூ.20 கோடி மதிப்பிலான 17.200 கி.கிராம் கஞ்சா எண்ணெய் 2017 ஆக., 20ல் போலீசாரிடம் சிக்கியது.இந்த கடத்தல் வழக்கில் 12 பேர் கைது செய்யப்பட்டனர்.தொடுபுழாவில் உள்ள மாவட்ட போதை பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது.வழக்கில் நெடுங்கண்டத்தைச் சேர்ந்த அப்பின்திவாகரன், ராமக்கல்மேட்டைச் சேர்ந்த பிஜூ, சாந்தாம்பாறையைச் சேர்ந்த ஷினோஜான், முண்டியெருமையைச் சேர்ந்த அஞ்சுமோன் ஆகியோருக்கு தலா 10ஆண்டுகள் சிறை தண்டனையும், அப்பின்திவாகரனுக்கு ரூ.1.5 லட்சம், மற்ற மூவருக்கு தலா ரூ.ஒரு லட்சம் வீதம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஒருவர் இறந்துவிட்டார். இருவர் மீதான விசாரணை முடியவில்லை. 5 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.------------
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE