பொது செய்தி

இந்தியா

4 இட்லிகளை 10 ரூபாய்க்கு கொடுக்கிறேன்!

Added : ஜன 10, 2021
Share
Advertisement
சேலத்தில், ஏழை, எளியவர்கள் வசிக்கும் பகுதியில், நான்கு இட்லி, 10 ரூபாய்க்கு வழங்கி வருவது பற்றி மகேஷ்: எங்கள் முன்னோர், தஞ்சாவூரை ஆண்ட சரபோஜி மன்னரின் வம்சாவளியினர். 300 ஆண்டுகளுக்கு முன் தமிழகம் வந்தவர்களின் வழித்தோன்றல்கள் நாங்கள். சுதந்திரப் போராட்டங்களிலும் அவர்களின் பங்கு இருந்தது. என் அம்மா வழித் தாத்தா ஸ்ரீனிவாசமூர்த்தி ராவ், சைமன் கமிஷனின் போது ஆங்கிலேய

சேலத்தில், ஏழை, எளியவர்கள் வசிக்கும் பகுதியில், நான்கு இட்லி, 10 ரூபாய்க்கு வழங்கி வருவது பற்றி மகேஷ்: எங்கள் முன்னோர், தஞ்சாவூரை ஆண்ட சரபோஜி மன்னரின் வம்சாவளியினர். 300 ஆண்டுகளுக்கு முன் தமிழகம் வந்தவர்களின் வழித்தோன்றல்கள் நாங்கள். சுதந்திரப் போராட்டங்களிலும் அவர்களின் பங்கு இருந்தது. என் அம்மா வழித் தாத்தா ஸ்ரீனிவாசமூர்த்தி ராவ், சைமன் கமிஷனின் போது ஆங்கிலேய அதிகாரியை, வண்டியிலிருந்து கீழே தள்ளி, தன் எதிர்ப்பைக் காண்பித்தவர்.

அவரின் கண்கள் பறிக்கப்பட்டு, பல சித்ரவதைகளை சிறையில் அனுபவித்தவர். அப்பா ஸ்ரீதரனும் சேவைகளில் சளைத்தவரில்லை. அரசுக் கல்லுாரியின் முதல்வராக இருந்த அவர், ரத்த தானம் ஏழை மாணவர்களுக்கு கல்வி போன்ற எண்ணற்ற சேவைகளை செய்துள்ளார். நான், என் மனைவி பத்மஸ்ரீ, மகள் கோபிகா, மகன் கிருஷ்ண கேசவ் தாஸ் ஆகியோர், 'இஸ்கான்' எனப்படும், கிருஷ்ண பக்த அமைப்பில் ஈடுபாடு உடையவர்கள். கொரோனா ஊரடங்கில், நிறைய பேர் உண்ண உணவின்றித் தவித்தனர். எதை வேண்டுமானாலும் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால், பசி வந்து விட்டால் கடவுளே ஆனாலும் பொறுக்க முடியாது. அந்த நேரத்தில், 7,000 பேருக்கு உணவு தந்தோம்.

அப்போது, எனக்குள் விழுந்தது இந்த சேவைக்கான ஆரம்பப் புள்ளி. இந்த, 'லாக் டவுன்' சமயத்தில் வருமானமின்றி தவிப்பவர்களுக்காக, மலிவு விலையில் காலை உணவைத் தந்தால் என்ன என்று சிந்தித்தேன். ஏற்கனவே என் தந்தை, பி.எஸ்.ஸ்ரீதரன் அறக்கட்டளை மூலம் சேவைகள் செய்வதால் பெற்ற அனுபவங்கள் கை கொடுத்தன. நான் நேசிக்கும் 'ஹீரோ', என் 'ரோல்மாடல்', பிரதமர் மோடி என்பதால், அவரின் பெயரையே வைத்தேன். கிட்டத்தட்ட, நான்கு மாதங்களாக, 'பிளான்' செய்து, அதற்கான உபகரணங்களுடன், இந்த இடத்தில் சமையல் கூடத்தை உருவாக்கினோம்.மலிவு விலையில், 10 ரூபாய்க்கு நான்கு இட்லிகள், சாம்பாருடன் தர முடிவு செய்து, இப்போது வரை வழங்கி வருகிறேன்.

என் தந்தைக்கு சொந்தமான நிலம் ஒன்று என்னிடம் இப்போது தான் வந்தது. அதை விற்றுக் கிடைத்த பணத்தைத் தான், இந்த சேவைக்கான முதலீடாக போட்டிருக்கிறேன்.நாம் எவ்வளவு சொத்து சம்பாதித்தாலும், போகும்போது எதையும் எடுத்துச் செல்லப் போவதில்லை. அப்படியிருக்க, நம்மால் முடிந்த உதவிகளைச் செய்யலாமே என்று தான் இதை செய்கிறேன். இப்போது சேலத்தின் முக்கியமான, 12 இடங்களில் மோடி இட்லிகள் கிடைக்க வழி செய்துள்ளோம்.விரைவில் மோடி தோசை, சப்பாத்திகளை யும் தர இருக்கிறோம். எங்கள் அறக்கட்டளை மூலம், எங்களால் முடிந்த பட்ஜெட்டில், காலை உணவுகளை வழங்கி வருவதால், மேலும் பலருக்கு வேலைவாய்ப்புகளும் கிடைக்கும்!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X