சென்னை:'வனப் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், வனத்தின் வளத்தை அதிகரிக்கவும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, வனத் துறை அமைச்சர் சீனிவாசன் உத்தரவிட்டார்.
வனத் துறை அலுவலர்கள் ஆய்வு கூட்டம், சென்னையில் நடந்தது. அமைச்சர் சீனிவாசன், தலைமை வகித்து பேசியதாவது:மனித, வன உயிரின மோதல்களை தவிர்க்க, ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். வன திட்டப் பணிகள் மற்றும் தீத்தடுப்பு முன்னோடி பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
பசுமை பரப்பை, 33 சதவீதமாக உயர்த்த வேண்டும். வனப் பகுதியில், ஆக்கிரமிப்புகளை அகற்றவும், வனத்தின் வளத்தை அதிகரிக்கவும், நடவடிக்கை எடுக்க வேண்டும்.வனத் துறையில் தவறு நடக்காத வகையில், விழிப்புணர்வில் ஈடுபடும் அதிகாரிகள், கவனத்துடன் செயல்பட வேண்டும். யானை உள்ளிட்ட வன விலங்குகள் இறப்பை தடுக்க, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அமைச்சர் அறிவுரை வழங்கினார்.
கூட்டத்தில், வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலர் சந்தீப்சக்சேனா, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் யுவராஜ், தலைமை திட்ட இயக்குனர் சஞ்சய்குமார் ஸ்ரீவஸ்தவா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE