பொது செய்தி

தமிழ்நாடு

தென் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை

Updated : ஜன 10, 2021 | Added : ஜன 10, 2021
Share
Advertisement
சென்னை : 'தென் தமிழகத்தில், இன்று முதல் மூன்று நாட்களுக்கு, ஓரிரு இடங்களில், இடியுடன் கூடிய கன மழையும், பெரும்பாலான இடங்களில், மிதமான மழையும் பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து, ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது: இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை,

சென்னை : 'தென் தமிழகத்தில், இன்று முதல் மூன்று நாட்களுக்கு, ஓரிரு இடங்களில், இடியுடன் கூடிய கன மழையும், பெரும்பாலான இடங்களில், மிதமான மழையும் பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



latest tamil news




இதுகுறித்து, ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது: இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, துாத்துக்குடி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், இடியுடன் கூடிய கன மழை மற்றும் மிக கன மழை பெய்யும்.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில், கன மழையும், ஏனைய மாவட்டங்களில், அனேக இடங்களில், மிதமான மழையும் பெய்யும். நாளை, ராமநாதபுரம், துாத்துக்குடி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், இடியுடன் கூடிய, கன மற்றும் மிக கன மழை; சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில், இடியுடன் கன மழை; ஏனைய மாவட்டங்களில், பெரும்பாலான இடங்களில், மிதமான மழை பெய்யும்.


latest tamil news



நாளை மறுதினம், திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழை, தென் மாவட்டங்களில், ஒரு சில இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யும். வரும், 13ம் தேதி, தமிழகத்தில், தென் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், லேசான மழை பெய்யலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்த வரை, அடுத்த, 48 மணி நேரத்திற்கு, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில், லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.

கடந்த, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, கன்னியாகுமரி மாவட்டம், சுராலகோடு, புத்தன் அணை, கொடைக்கானல் போர்ட் கிளப் பகுதிகளில், தலா, 7 செ.மீ., மழை பெய்துள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை : தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில், இன்றும்; தென்மேற்கு வங்க கடல், குமரிக்கடல் பகுதிகளில் நாளையும், மணிக்கு, 40 முதல், 50 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். வரும், 12ம் தேதி, தென்கிழக்கு அரபிக்கடல்; 12, 13ம் தேதிகளில், கேரளா கடலோர பகுதி மற்றும் லட்சத்தீவு பகுதிகளில், மணிக்கு, 40 முதல், 50 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும். எனவே, மீனவர்கள் மேற்கூறிய பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X