ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் பிறந்த ஆண் குழந்தைக்குப் பதில் பெண் குழந்தையை மாற்றிவிட்டதாக கூறப்படும் பிரச்னையில் சம்பந்தப்பட்ட குழந்தைகளுக்கு மரபணுச் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் அருகே சக்கரக்கோட்டையை சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர் மைனர், இவரது மனைவி நாகலட்சுமி. இவர்களுக்கு ஏற்கெனவே இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், மூன்றாவது பிரசவத்துக்காக நாகலட்சுமி ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் 2020 டிச., 14ல் சேர்ந்துள்ளார்.அங்கு அறுவைச் சிகிச்சை மூலம் டிச., 18ல் பெண் குழந்தை பிறந்ததாக சிகிச்சைப் பிரிவில் இருந்த செவிலியர் கூறியுள்ளார். இந் நிலையில் மைனருக்கு பெயரில்லாத கடிதம் ஒரு செவிலியர் அனுப்பியுள்ளார்.
அதில் தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்ததை மாற்றிவிட்டனர் என குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து எஸ்.பி., அலுவலகத்தில் மைனர், குழந்தை மாற்றம் குறித்து புகார் அளித்துள்ளார்.இது குறித்து கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் மருத்துவமனை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தியுள்ளார். மேலும் குழந்தை மாற்றப்பட்ட விவகாரத்தில் மரபணு சோதனை செய்ய உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.--
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE