புதுடில்லி:சிறந்த பெண் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும், 'சமேலி தேவி ஜெயின்' விருதுக்கான பரிந்துரைகளை சமர்ப்பிக்க, 'மீடியா பவுண்டேஷன்' அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.கடந்த, 1982ல், ஊடக துறையில் சிறந்து விளங்கும் பெண் பத்திரிகையாளர்களை கவுரவிக்கும் விதமாக, சமேலி தேவி ஜெயின் என்ற விருதை, மீடியா பவுண்டேஷன் அமைப்பு உருவாக்கியது. ஒவ்வொரு ஆண்டும், இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.கடந்த ஆண்டில் சிறந்து விளங்கிய பெண் பத்திரிகையாளரை தேர்வு செய்யும் நடைமுறை துவங்கியுள்ளது. அதற்கான பரிந்துரைகளை சமர்ப்பிக்கும்படி, மீடியா பவுண்டேஷன் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.இதுகுறித்து, நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:அச்சு ஊடகம், டிஜிட்டல், ஒளிபரப்பு, நடப்பு விவகாரங்கள் ஆவணப்பட ஊடகம் உள்ளிட்ட பிரிவுகளை சேர்ந்த புகைப்பட கலைஞர்கள், கார்ட்டூனிஸ்ட் செய்தித்தாள் வடிவமைப்பாளர்கள் உள்ளிட்ட அனைத்து பத்திரிகையாளர்களையும், இந்த விருதுக்காக பரிந்துரைக்கலாம். கடந்த ஆண்டு சிறந்து விளங்கிய பெண் பத்திரிகையாளர்களை தேர்வு செய்து, வரும், 30ம் தேதிக்குள் பரிந்துரைக்கவேண்டும். இந்த விருதை பெற, அந்த பத்திரிகையாளர் எந்த வகையில் தகுதியானவர் என்பது குறித்த விளக்கமும் அதில் இடம்பெறவேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE