அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆபாச பேச்சு: உதயநிதி மீது புகார்

Added : ஜன 10, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:'முதல்வர் மற்றும் சசிகலா குறித்து, ஆபாசமாக பேசிய, தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் ஸ்ரீராஜலட்சுமி. இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் மனு:தி.மு.க., தலைவர் ஸ்டாலினின் மகன் உதயநிதி; அக்கட்சியின்

சென்னை:'முதல்வர் மற்றும் சசிகலா குறித்து, ஆபாசமாக பேசிய, தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் ஸ்ரீராஜலட்சுமி. இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் மனு:தி.மு.க., தலைவர் ஸ்டாலினின் மகன் உதயநிதி; அக்கட்சியின் இளைஞரணி செயலராக உள்ளார்.

இவர், சமீபத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய ஆபாச பேச்சு, சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதைக்கண்டு அதிர்ச்சியுற்றேன். முதல்வர் இ.பி.எஸ்., - சசிகலா காலில் விழுந்து பதவி பெற்றார் என்பதை குறிப்பிட்டு பேசியுள்ள உதயநிதி, 'விட்டால் அவரது சேலைக்குள் புகுந்திருப்பார்' என, பெண்களை இழிவுப்படுத்தும் வகையில், அநாகரிகமான முறையில் பேசியுள்ளார்.

இதன் வாயிலாக, பெண்களை மிக கேவலமாக சித்தரித்திருப்பதுடன், முதல்வர் இ.பி.எஸ்., நற்புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், உதயநிதி பேசியது, இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் தண்டனைக்குரியது.இதனால், பெண்களை இழிவுப்படுத்துதல், பொது இடங்களில் ஆபாசமாக பேசுதல் போன்ற குற்றங்கள் புரிந்துள்ள உதயநிதி மீது, வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
.Dr.A.Joseph - London,யுனைடெட் கிங்டம்
10-ஜன-202122:24:18 IST Report Abuse
.Dr.A.Joseph "கண்ணா உன் சேலைக்குள்ள கட்டெறும்பு புகுந்திருச்சி எதுக்கு " என பாடல் வரும் போதே கடுமையாக கண்டித்திருந்தால் இன்றைக்கு இப்படி பேச மாட்டார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X