கோவை:கோவையில், ஒரே நாளில் 90 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.மாவட்டத்தில் நேற்று புதிதாக, 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. மொத்த பாதிப்பு, 53 ஆயிரத்து 49 ஆக உயர்ந்தது. நேற்று உயிரிழப்புகள் ஏதும் இல்லை. பலி எண்ணிக்கை, 660 ஆக உள்ளது.அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த, 90 பேர் ஒரே நாளில் குணமடைந்து வீடு திரும்பினர். குணமடைந்தோர் எண்ணிக்கை 51 ஆயிரத்து 677 ஆக உயர்ந்தது. தற்போது, 712 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE