சென்னை:'மக்கள் பாதை' அறக்கட்டளையில் இருந்து, சகாயம் ஐ.ஏ.எஸ்., நீக்கப்படுவதாக, அந்த இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, மக்கள் பாதை அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: மக்கள் பாதை அறக்கட்டளை, 2016ல் துவங்கப்பட்டது. அதன் தலைவராக நாகல்சாமி ஐ.ஏ.எஸ்., - வழிகாட்டியாக சகாயம் ஐ.ஏ.எஸ்., இருந்தனர். ஜாதி, மதம் கடந்து, ஜனநாயக பூர்வமான இயக்கத்தை தேடி வந்த இளைஞர்களுக்கு, சகாயத்தின் வழிகாட்டுதல் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.
எனவே, அனைத்து கள வீரர்களின் கருத்துகளின்படி, மக்கள் பாதை, இனி சகாயம் வழிகாட்டுதல் இன்றி, தொடர்ச்சியாக மக்கள் பணிகளில் ஈடுபட உள்ளது. இளைஞர்களின் கருத்துக்களை கேட்டறிந்து, கொள்கை அடிப்படையில், கருத்தியல் ரீதியாக இனி மக்கள் பாதை இயங்கும்.
அதன்படி, தலைவர் நாகல்சாமி ஐ.ஏ.எஸ்., தலைமையில், செயலர் விக்னேஷ், பொருளாளர் வெற்றிச்செல்வி ஆகியோர் நியமிக்கப்பட்டு, மக்கள் பாதை தன் செயல்பாட்டை தொடர உள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE