பொது செய்தி

தமிழ்நாடு

சிறைவாசிகளை 14ம் தேதி முதல் உறவினர்கள் சந்திக்கலாம்

Added : ஜன 10, 2021
Share
Advertisement
சென்னை : சிறைவாசிகளை உறவினர்கள் சந்திப்பது, வரும், ௧௪ம் தேதி முதல் மீண்டும் துவங்க உள்ளது. தமிழக சிறைத்துறை டி.ஜி.பி., சுனில்குமார் சிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, சிறைவாசிகளை உறவினர்கள் சந்திப்பது, 2020 மார்ச், 17 முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதற்கு பதிலாக சிறைகளுக்கு, 'ஆன்ட்ராய்டு' மொபைல் போன் வழங்கப்பட்டு,

சென்னை : சிறைவாசிகளை உறவினர்கள் சந்திப்பது, வரும், ௧௪ம் தேதி முதல் மீண்டும் துவங்க உள்ளது.

தமிழக சிறைத்துறை டி.ஜி.பி., சுனில்குமார் சிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, சிறைவாசிகளை உறவினர்கள் சந்திப்பது, 2020 மார்ச், 17 முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதற்கு பதிலாக சிறைகளுக்கு, 'ஆன்ட்ராய்டு' மொபைல் போன் வழங்கப்பட்டு, சிறைவாசிகள், தங்கள் உறவினர்களுடன், 'வீடியோ கால்' வாயிலாக பேச அனுமதிக்கப்பட்டனர்.இந்நிலையில், நேரடி சந்திப்பை மீண்டும் துவங்கக் கோரி, சிறைவாசிகள் மற்றும் அவர்களது உறவினர்களிடமிருந்து கோரிக்கைகள் வந்தன. அதனால், 14ம் தேதி முதல், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், சிறைவாசிகளை, அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் சந்திப்பது துவங்க உள்ளது.

சிறைவாசிகளை உறவினர்கள் சந்திக்கும் போது, பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், சிறை கண்காணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதன் விபரம்:  சிறைவாசிகளை சந்திக்க விரும்புவோர், 'e-prisons visitors management system' அல்லது அந்தந்த சிறைகளுக்கென தரப்பட்டுள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு, குறைந்தபட்சம், 24 மணி நேரத்திற்கு முன், முன்பதிவு செய்ய வேண்டும். சந்திப்புக்கு என ஒதுக்கப்பட்டுள்ள நேரத்திற்கு குறைந்தபட்சம், 30 நிமிடங்களுக்கு முன், சிறைக்கு வருகை தர வேண்டும் சந்திப்பின் போது, ஒரு சிறைவாசியை பார்க்க, ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களை தவிர்த்து மற்ற நாட்களில், காலை, 9:00 முதல் பிற்பகல், 2:00 மணி வரை, சந்திப்புக்கு தலா, 15 நிமிடங்கள் அனுமதி வழங்கப்படும்

 மாதத்திற்கு ஒரு குடும்பம் மட்டுமே அனுமதிக்கப்படும். உடல் வெப்பநிலை சோதனை, கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்த பின், பார்வையாளர்கள்முக கவசத்துடன் சமூக இடைவெளியை கடைப்பிடித்து, சிறைவாசியை பார்க்க வேண்டும் புழல், கோவை, மதுரை மத்திய சிறைகளில், தினமும் அதிகபட்சமாக, 150 பேர்; மற்ற மத்திய சிறைகளில், 75 பேர்; பெண்களுக்கான தனிச்சிறைகளில், 25 பேரும் அனுமதிக்கப்படுவர் பார்வையாளர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறை விபரங்களை, www.prisons.tn.gov.in என்ற, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் முன்பதிவை, தொலைபேசி எண்கள் வாயிலாக, காலை, 9:00 முதல் மாலை, 6:00 மணிக்குள் மேற்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.தொடர்பு எண்கள் இதுதான்!சிறைகள் தொலைபேசி எண்கள்புழல் - 1 93454 74957புழல் - 2 97907 98043வேலுார் 0416 2900013கடலுார் 94885 88512திருச்சி 0431 2333213சேலம் 0427 2405163கோவை 0422 2307218மதுரை 0452 2361125பாளையங்கோட்டை 0462 2531845பெண்கள் தனிச்சிறை, புழல் 93454 58296பெண்கள் தனிச்சிறை, வேலுார் 0416 2900014பெண்கள் தனிச்சிறை, திருச்சி 93454 67960பெண்கள் தனிச்சிறை, மதுரை 0452 2361132பெண்கள் தனிச்சிறை, கோவை 0422 2301819

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X