மாநகராட்சியில் 15 மேல்நிலை, 9 உயர்நிலை, 14 நடுநிலை, 26 துவக்கப்பள்ளிகள் உள்ளன. 18 ஆயிரம் மாணவர்கள் வரை படிக்கின்றனர். கற்றல் திறனை மேம்படுத்த 5 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பு நிறுவப்பட்டது.
பிறகு மேலும் 9 பள்ளிகளில் இவ்வசதிகிடைக்க ஏற்பாடு நடந்தது.தற்போது 3வது கட்டமாக 6 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பு அமைகிறது. இதற்காக ரூ.43.76 லட்சம் ஒதுக்கப்பட்டுஉள்ளது. கட்டபொம்மன் துவக்கப்பள்ளி, ஜவகர்புரம் நடுநிலைப்பள்ளி, பொன்முடியார் மேல்நிலைப் பள்ளி, சாத்தமங்கலம் நடுநிலைப்பள்ளி உட்பட 6 மாநகராட்சி பள்ளிகள் பயன் பெறுகின்றன. இப்பள்ளிகளில் இணையதள வசதி வழங்கப்படும். புரொஜக்டர் வசதி மூலம் பாடம் நடத்தப்படும். படங்கள், வீடியோக்களை காட்டுவதன் மூலம் மாணவர்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.மாநகராட்சி கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'ஸ்மார்ட் வகுப்பு வசதி மாணவர்களின் கற்றல் திறனை பெருமளவு மேம்படுத்தும்.
நீட் போன்ற தேர்வுகளுக்கு தயாராக உதவும். இம்முறை 13 மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர். அடுத்த முறை இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE