அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் 5,000 பேருக்கு பிரியாணி விருந்து

Added : ஜன 10, 2021
Share
Advertisement
சென்னை:அ.தி.மு.க., பொதுக்குழுவில் பங்கேற்ற, 5,000 பேருக்கு மட்டன் பிரியாணியும்; 1,000 பேருக்கு சைவ விருந்தும் வழங்கப்பட்டன. அ.தி.மு.க., செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில், நேற்று நடந்தது. இதில், மாநிலம் முழுதும் இருந்து, 3,000க்கும் மேற்பட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள்; 3,000த்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்றனர்.

சென்னை:அ.தி.மு.க., பொதுக்குழுவில் பங்கேற்ற, 5,000 பேருக்கு மட்டன் பிரியாணியும்; 1,000 பேருக்கு சைவ விருந்தும் வழங்கப்பட்டன.

அ.தி.மு.க., செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில், நேற்று நடந்தது. இதில், மாநிலம் முழுதும் இருந்து, 3,000க்கும் மேற்பட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள்; 3,000த்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்றனர். பாதுகாப்பு பணியில், ஆயிரக்கணக்கான போலீசார் ஈடுபட்டனர்.

அவர்களுக்கு, தம்ரூட் அல்வா, மட்டன் பிரியாணி, சிக்கன் வறுவல், முட்டை தொக்கு, வஞ்சிரம் மீன் வறுவல், வெங்காய பச்சடி, கத்தரிக்காய் தொக்கு, ஐஸ்கிரீம், பீடா, வாழைப்பழம் போன்றவை, மதிய விருந்தாக வழங்கப்பட்டன.

வழக்கமாக, வாழை இலைபோட்டு உணவு பறிமாறப்படும். கொரோனா காலம் என்பதால், வாழை மட்டை தட்டில் வைத்து, 'பபே' முறையில், இந்த உணவுகள் பறிமாறப்பட்டன. இதற்காக மண்டபத்திற்கு வெளியே, இரண்டு பிரமாண்டமான பந்தல்கள் அமைக்கப்பட்டு இருந்தன. அதுமட்டுமின்றி, 1,000 பேருக்கு தம்ரூட் அல்வா, பைனாப்பிள் கேசரி, காலிபிளவர் பக்கோடா, சாம்பார் சாதம், தயிர் சாதம், வெள்ளை சாதம்.ரசம், நேஷனல் பொறியல், வாழைக்காய் - உருளைக்கிழங்கு கறி, ஐஸ்கிரீம், அப்பளம், வடை, பாயாசம், வாழைப்பழம், பீடா ஆகியவையும் பறிமாறப்பட்டன.

மண்டப வளாகத்தினுள் உள்ள உணவறையில், முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், 100 பேருக்கு தனியாக உணவு பறிமாறப்பட்டது. இந்த உணவு வகைகள் அனைத்தும், மண்டப வளாகத்திலேயே சுடச்சுட சமைத்து பறிமாறப்பட்டதால், நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் ரசித்து, ருசித்து சாப்பிட்டனர்.

சிவகங்கையில் இருந்து வந்திருந்த, சமையல் கலைஞர் ஆத்தங்குடி பெருமாள் தலைமையிலான குழுவினர், இந்த உணவுகளை சமைத்தனர். அசைவ உணவு ஒரு பிளேட், 1,000 ரூபாய்; சைவ உணவு, 500 ரூபாய் என்ற அளவில், அ.தி.மு.க., தலைமை இதற்காக செலவிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X