பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் இந்தாண்டு இறுதிக்குள், 20 சதவீத மக்களுக்கு கொரோனா தடுப்பூசி

Added : ஜன 10, 2021
Share
Advertisement
சென்னை:''தமிழகத்தில் இந்தாண்டு இறுதிக்குள், 20 சதவீத மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும்,'' என, சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.கொரோனா தடுப்பூசி போடும் பணி, வரும், 16ல் துவங்கும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. அதேநேரத்தில், தமிழகத்தில் எப்போது துவங்கும் என்ற கேள்வி எழுந்துஉள்ளது.இது குறித்து, தமிழக சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன் வெளியிட்ட

சென்னை:''தமிழகத்தில் இந்தாண்டு இறுதிக்குள், 20 சதவீத மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும்,'' என, சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கொரோனா தடுப்பூசி போடும் பணி, வரும், 16ல் துவங்கும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. அதேநேரத்தில், தமிழகத்தில் எப்போது துவங்கும் என்ற கேள்வி எழுந்துஉள்ளது.இது குறித்து, தமிழக சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில், தடுப்பூசிகளை சேமித்து வைக்கும் கிடங்குகள், தடுப்பூசி போடப்படும் இடங்கள், தடுப்பூசிகளை கொண்டு செல்லும் பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தும், தயார் நிலையில் உள்ளன. தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகையும் நடந்துள்ளது.மத்திய அரசு தடுப்பூசி வழங்கிய மறுநாளில் இருந்து, தடுப்பூசி போடும் பணி துவக்கப்படும்.

இந்தாண்டு இறுதிக்குள், 1.6 கோடி பேருக்கு என, 20 சதவீத மக்களுக்கு, தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள் என, ஆறு லட்சம் முன்கள பணியாளர்களுக்கு, முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்படும். இதற்கு, தடுப்பூசி செயலியில் பதிவு செய்ய வேண்டும்.

பொதுமக்கள் செயலியில் பதிவு செய்வது, இன்னும் துவங்கப்படவில்லை. தமிழகத்தில், கொரோனா தொற்று பாதிப்பு மற்றும் இறப்பு நன்றாக குறைந்துள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X