தமிழ்நாடு

ஆய்வு! மதுரை விமான நிலையத்தில் 9 மாதங்களில் ... ரூ.300 கோடியில் விரிவாக்கப் பணிகள் துவங்க அதிகாரிகள்

Added : ஜன 10, 2021
Share
Advertisement
பெருங்குடி : மதுரை விமான நிலையத்தில் ரூ. 300 கோடியில் முனைய கட்டட விரிவாக்க பணிகள் 9 மாதங்களில் துவங்க உள்ளது, என விமான அமைச்சக தென்மண்டல பொறியியல் பிரிவு இயக்குநர் சஞ்சிவ் ஜிந்தால் தெரிவித்தார். மதுரை விமான நிலையத்தில் நடக்கும் பணிகளை ஆய்வு செய்ய விமான அமைச்சக தென்மண்டல பொறியியல் பிரிவு இயக்குநர் சஞ்சிவ் ஜிந்தால் தலைமையில் குழுவினர் நேற்று மதுரை

பெருங்குடி : மதுரை விமான நிலையத்தில் ரூ. 300 கோடியில் முனைய கட்டட விரிவாக்க பணிகள் 9 மாதங்களில் துவங்க உள்ளது, என விமான அமைச்சக தென்மண்டல பொறியியல் பிரிவு இயக்குநர் சஞ்சிவ் ஜிந்தால் தெரிவித்தார்.

மதுரை விமான நிலையத்தில் நடக்கும் பணிகளை ஆய்வு செய்ய விமான அமைச்சக தென்மண்டல பொறியியல் பிரிவு இயக்குநர் சஞ்சிவ் ஜிந்தால் தலைமையில் குழுவினர் நேற்று மதுரை வந்தனர்.ஆய்வுக்குப் பின் சஞ்சிவ் ஜிந்தால் கூறியதாவது:மதுரை விமான நிலையத்திலும் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வரும் கட்டுமான பணிகள் முடிவடையும் போது இந்த விமான நிலையம் சர்வதேச தரத்திற்கு முன்னேற்றம் அடைந்து விடும். அப்போது பயணிகள், சரக்கு, விமானங்களின் சேவைகளும் அதிகரிக்கும். விமான நிலைய முனைய கட்டடம் விரிவாக்கம் செய்யும் பணிகள் 300 கோடி ரூபாயில் 9 மாதத்தில் தொடங்க உள்ளது. தற்போதைய முனைய கட்டடத்தில் 750 பயணிகளை கையாளலாம்.

புதிதாக அமையவுள்ள முனைய கட்டடத்தில் 2600 பயணிகளை கையாளலாம். மேலும் தற்போதுள்ளதை விட 2 மடங்கு மின்சாரம் தயாரிக்கும் சோலார் மின் திட்டம் விரிவாக்கப்பட உள்ளது.ரூ. 100 கோடி மதிப்பீட்டில் அதி நவீன வசதிகளுடன் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையமும், அதில் 50 மீட்டர் உயரத்தில் சிக்னல்கோபுரம் அமைக்கப்படும். இது முப்பரிமாணத்தில் செயல்படும் திறன் கொண்டது. இதன்மூலம் கூடுதலாக விமானங்களை தரையிறக்கலாம். கூடுதலாக 7 விமானங்களை பார்க்கிங் செய்யும் வசதியும் ஏற்படுத்த முடியும். மதுரை விமான நிலையத்தில் மேல் பகுதியில் விமான ஓடுதளமும்.

கீழ்பகுதியில் வாகன போக்குவரத்து வசதி ஏற்படுத்தும் வகையில் அண்டர்பாஸ் முறை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விமான அமைச்சகத்தின் பொறியியல் பிரிவு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்திற்கு தமிழக அரசு ஒத்துழைக்கும் பட்சத்தில் விமான நிலைய உள் வளாகத்தில் ரூ. 800 கோடி மதிப்பில் பல்வேறு இதர பணிகளும் நடைபெறும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X