போக்குவரத்து நெரிசல்
* அ.தி.மு.க., பொதுக்குழுவிற்கு கார்கள், பஸ்களில் வந்த நிர்வாகிகளால், கோயம்பேடு முதல் திருவேற்காடு வரை, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பெருங்களத்துார் - புழல் இடையிலான சென்னை பைபாஸ் சாலையில், சரக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதால், ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால், ஒன்பது மணி நேரத்திற்கு மேலாக, சரக்கு வாகன டிரைவர்கள் அவதிக்குள்ளாயினர்.
செங்கோல், வீர வாள்
* பொதுக்குழுவில் பங்கேற்ற முதல்வர் இ.பி.எஸ்.,சுக்கு செங்கோலையும், துணை முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு வீர வாளையும், எம்.ஜி.ஆர்., இளைஞரணி இணை செயலர் டாக்டர் சுனில் உள்ளிட்டோர் வழங்கினர். திருவள்ளூர் மத்திய மாவட்ட அ.தி.மு.க., சார்பில், பிரமாண்ட மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு, நினைவு பரிசும் வழங்கப்பட்டது
* கொரோனா காலம் என்பதால், இந்த பொதுக்குழு கூட்டத்தை காண, தொண்டர்கள் அதிகம் வரவில்லை. இதனால், ஜெ., - எம்.ஜி.ஆர்., போட்டோக்கள், கார்களில் மாட்டும் கட்சி கொடிகள், பேட்ஜ்கள் விற்பனை செய்ய வந்த வர்கள் ஏமாற்றம் அடைந்தனர்
* உள் அரங்கில் நடக்கும் கூட்டங்களில், முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், 50 சதவீத இருக்கைகளில் அனுமதி உள்ளிட்டவற்றை பின்பற்ற, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆனால், பொதுக்குழுவில் சமூக இடைவெளியின்றி மாநில நிர்வாகிகள் முதல் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் அமர்ந்திருந்தனர். இதில், பலரும் முக கவசம் அணியாமல் விதியை மீறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE