கோவை:கோவை - சென்னை சென்ட்ரல் இடையே பண்டிகை கால சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.சென்னை சென்ட்ரலில் இருந்து வரும், 13ம் தேதி இரவு, 11:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில்(06089) அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக மறுநாள் காலை, 8:00க்கு கோவை வந்தடைகிறது.கோவையில் இருந்து வரும், 17ம் தேதி இரவு, 8:00க்கு புறப்படும் சிறப்பு ரயில் (06090) மறுநாள் காலை, 4:30க்கு சென்னை சென்ட்ரல் அடைகிறது. இந்த ரயிலுக்கான முன்பதிவு, இன்று காலை, 8:00 மணிக்கு துவங்குவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE