அரசியல் செய்தி

தமிழ்நாடு

கோவையில் இன்று முதல் 4 நாள் கமல் பிரசாரம்

Added : ஜன 10, 2021
Share
Advertisement
கோவை:மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல், 'சீரமைப்போம் தமிழகத்தை' என்ற தலைப்பில், கோவை மண்டலத்தில், இன்று முதல் நான்கு நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார்.மக்கள் நீதி மையம் கட்சியின் மாநில துணைத்தலைவர் மகேந்திரன் கூறியதாவது:கட்சி துவங்கியதும் லோக்சபா தேர்தலை சந்தித்தோம். தமிழகத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்பதே நோக்கம். ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தான், உண்மையான

கோவை:மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல், 'சீரமைப்போம் தமிழகத்தை' என்ற தலைப்பில், கோவை மண்டலத்தில், இன்று முதல் நான்கு நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார்.மக்கள் நீதி மையம் கட்சியின் மாநில துணைத்தலைவர் மகேந்திரன் கூறியதாவது:கட்சி துவங்கியதும் லோக்சபா தேர்தலை சந்தித்தோம். தமிழகத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்பதே நோக்கம். ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தான், உண்மையான மாற்றத்தை ஏற்படுத்த முடியும். புதிய மாற்றத்தை ஏற்படுத்த, 'சீரமைப்போம் தமிழகத்தை' என்ற பிரகடனத்துடன், கட்சி தலைவர் கமல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.தமிழகத்தை, எட்டு மண்டலங்களாக பிரித்து மக்களையும், சான்றோர்களையும் சந்தித்து உரையாடுகிறார். தேர்தலுக்கு முன், முதற்கட்ட சுற்றுப்பயணத்தை, கோவை மண்டலத்தில் நிறைவு செய்கிறார். அதற்காக, கோவை மண்டலத்தில், 10ம் தேதி (இன்று) முதல், 13ம் தேதி வரை, நான்கு நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார்.சட்டசபை வாரியாக சென்று, நகர, கிராம மக்கள் அனைவரையும் சந்திக்கிறார். கட்சி சார்பில் வெளியிடப்பட்ட லஞ்ச பட்டியல் மக்களை சென்றடைந்துள்ளது. மக்கள் மத்தியில் மிகப்பெரிய மாற்றம், எழுச்சி ஏற்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X