அரசியல் செய்தி

தமிழ்நாடு

பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் முதல்வர் இ.பி.எஸ்.,சுக்கு வரவேற்பு

Added : ஜன 10, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
*அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த முதல்வர் பழனிசாமி., - துணை முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு, முளைப்பாரி, பூரண கும்பம், மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம். செண்டை மேளம், பறையாட்டம், தேவராட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் என, பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது*அ.தி.மு.க., கலைக் குழுவினரின் நடனமும், பல்வேறு இடங்களில் நடந்தது. முக்கிய
 பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் முதல்வர் இ.பி.எஸ்.,சுக்கு வரவேற்பு

*அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த முதல்வர் பழனிசாமி., - துணை முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு, முளைப்பாரி, பூரண கும்பம், மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம். செண்டை மேளம், பறையாட்டம், தேவராட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் என, பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது

*அ.தி.மு.க., கலைக் குழுவினரின் நடனமும், பல்வேறு இடங்களில் நடந்தது. முக்கிய சந்திப்புகளில் எல்லாம், பூங்கொத்து வழங்கி, முதல்வரையும், துணை முதல்வரையும் கட்சியினர் வரவேற்றனர். அமைச்சர் பெஞ்சமின் ஏற்பாட்டில், நெற்குன்றம் முதல், திருமண மண்டப நுழைவாயில் வரை, இந்த வரவேற்பு அளிக்கப்பட்டது

* தொண்டர்களுக்கு இலவச முகக் கவசம் வழங்கப்பட்டது. சாலையின் மையத் தடுப்பு முழுதும், செங்கரும்புகள், இளநீர், வாழைக் குலைகளால் கண்ணைக் கவரும் வகையில், அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. பொதுக்குழு கூட்டம் முடிவதற்குள், இதை பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் எடுத்து சென்றனர்
*பனை மற்றும் தென்னை ஓலை, வாழை இலை, கரும்பு, எலுமிச்சை பழம், அலங்கார இலைகளை வைத்து, பசுமை நிறைந்த வரவேற்பு வளைவு, பூந்தமல்லி நெடுஞ்சாலை சந்திப்பு மற்றும் மண்டப நுழைவுவாயிலில் அமைக்கப்பட்டிருந்தது.


பத்திரிகையாளர்கள் பரிதவிப்பு

அ.தி.மு.க., பொதுக்குழுவில் செய்தி சேகரிக்க, நாளிதழ், 'டிவி' நிருபர்கள், புகைப்படக் கலைஞர்கள், வீடியோ கிராபர்கள் அதிகம் வந்திருந்தனர். அவர்கள் அமரக்கூட இடம் வழங்கவில்லை. மண்டபத்தின் நுழைவாயில் அருகே, சிறிய மேடை அமைத்து, அதில், கேமராக்கள் வைக்க மட்டும் இடம் வழங்கப்பட்டது.

இதனால், காலை, 8:00 மணிக்கு வந்த செய்தியாளர்கள், மாலை, 3:00 மணி வரை, கால் கடுக்க நின்றிருந்தனர். மூத்த மற்றும் பெண் பத்திரிகையாளர்கள் பலரும், இதனால் அவதிப்பட்டனர். மண்டபத்திற்குள் அனுமதிக்காவிட்டாலும், சேர்களை போட்டு, வெளியே ஓர் ஓரத்திலாவது அமர வைத்திருக்கலாம் என, செய்தியாளர்கள் புலம்பினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
11-ஜன-202114:15:47 IST Report Abuse
Malick Raja ஒப்பாரி பாட்டு தினமும் தொலைக்காட்சியில் விளம்பரமாக ஒளிபரப்பிவிட்டார்கள் .. இனி என்ன ஆட்சியின் இறுதி சடங்குகள் நடந்தேறவேண்டியதில் ஏதும் எஞ்சிவிடக்கூடாது என்பது சரியாக இருக்கிறது .. விடைபெறுங்கள் ஓய்வெடுங்கள் . இனியாவது மக்கள் சற்று நிம்மதி பெறட்டும் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X