திருப்பூர்:'ஆன்லைன்' சூதாட்டத்தில் பல லட்சத்தை இழந்த கோவை வாலிபர், திருப்பூரில் தற்கொலை செய்தார்.கடந்த 5ம் தேதி, திருப்பூர், ஊத்துக்குளி ரோடு முதல் ரயில்வே கேட் அருகே, தண்டவாளத்தில், ஒரு வாலிபர் இறந்துகிடந்தார். சடலத்தை ரயில்வே போலீசார் கைப்பற்றினர்.விசாரணையில், இறந்தவர், கோவை, ஆவாரம்பாளையத்தில் வசித்துவந்த எல்வின் பிரட்ரிக், 29; டிரைவர், என தெரியவந்தது. கடந்த 4ம் தேதி வேலைக்கு செல்வதாக தாயிடம் கூறி சென்ற அவர், வீடு திரும்பவில்லை; 6ம் தேதி பிளமேடு போலீஸ் ஸ்டேஷனில், அவர் மாயமானதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.திருப்பூர் ரயில்வே போலீசார் கூறுகையில், 'வீட்டில் இருந்த, அவரது மொபைல் போனை கைப்பற்றி விசாரித்தபோது, 'ஆன்லைன்' ரம்மி விளையாடும் பழக்கம் இருந்தது தெரியவந்தது. ஏழு லட்சம் ரூபாய் வரை இழந்துள்ளார். மனமுடைந்த அவர், தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்துள்ளார்' என்றனர்.'ஆன்லைன்' சூதாட்டத்துக்கு அடிமையாகி பல இளைஞர்கள், தங்கள் வாழ்வைத் தொலைத்து வருகின்றனர். இதனால், தமிழக அரசு 'ஆன்லைன்' சூதாட்டங்களுக்கு தடை விதித்தது. இருப்பினும், 'ஆன்லைன்' சூதாட்டங்களை பலரும் தொடர்ந்துகொண்டுதான் உள்ளனர். 'ஆன்லைன்' சூதாட்டம் நடத்துவோர் மற்றும் விளையாடுவோர் மீது அதிரடி நடவடிக்கையை போலீசார் துவக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE