சின்னமனுார் : சின்னமனுாரில் உள்ள அரிகேசநல்லுார் ஆட்டோ சங்கத்தின் சார்பில் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரத்த தான முகாம் நடந்தது.
இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். தேனி மருத்துவக் கல்லுாரி ரத்தவங்கி சார்பில் டாக்டர் அனுமந்தன் தலைமையில் மருத்துவக் குழுவினர் ரத்தம் சேகரித்தனர். ஆட்டோ சங்கத்தின் உறுப்பினர்கள் நுாற்றுக்கணக்கில் ரத்ததானம் செய்தனர். 60 யூனிட்டுகள் ரத்தம் சேகரிக்கப்பட்டது. ரத்ததானம் செய்த ஆட்டோ டிரைவர்களுக்கு இன்ஸ்பெக்டர் மரக்கன்றுகள் வழங்கி, மரங்களை வளர்க்க ஊக்குவித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சங்க தலைவர் லோகநாதன், நிர்வாகிகள் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE