கோவை:தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாநில அளவில், மாவட்ட தலை நகரங்களில், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டும் உள்ளிட்ட, 15 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் அருள்சுந்தரரூபன், மாவட்ட செயலாளர் தங்கபாசு, தமிழ்நாடு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்டத் தலைவர் சரவணக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE