திருப்பூர்;சட்டசபை தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள, 'விவி பேட்' கருவிகளுக்கு, புனேவில் இருந்து புதிய 'பேட்டரி'கள் தருவிக்கப்பட்டுள்ளன.தமிழக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகளை, தேர்தல் கமிஷன் துவக்கியுள்ளது. வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி இறுதி வடிவம் பெற்றுள்ளது; வரும் 20ம் தேதி, வாக்காளர் இறுதி பட்டியல் வெளியிடப்படுகிறது.ஒவ்வொரு மாவட்டத்துக்கும், தேவையான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் ஒதுக்கப்பட்டு, முதல்கட்ட சரிபார்ப்பு பணி நடந்து வருகிறது. சட்டசபை தேர்தலில் முதல் முறையாக, அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், 'விவி பேட்' பயன்படுத்தப்பட உள்ளது.வாக்காளர், தாங்கள் விரும்பிய வேட்பாளருக்கு ஓட்டு பதிவானதை உறுதி செய்து கொள்ளலாம். மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தின், 'கன்ட்ரோல் யூனிட்', 'பேலட் யூனிட்' சரிபார்ப்பை தொடர்ந்து, 'விவி பேட்' கருவிகள் சரிபார்ப்பு, இந்த வாரம் துவங்குகிறது.இதற்காக, புதிய 'பேட்டரி'கள் தருவிக்கப்பட்டுள்ளன. புனே, 'பாரத் எலக்ட்ரானிக்ஸ்' நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்த, பேட்டரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மாவட்டம் தோறும், 4,500 முதல், 5,000 'பேட்டரிகள் தருவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.ஊட்டி, ஜன. 10-- -
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா குணமான, 13 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.நேற்று, இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 8,033 ஆனது. 13 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை, 7,896 பேர் குணமடைந்து வீடு திரும்பினார். 90 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலி எண்ணிக்கை,47 ஆக உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE