பொது செய்தி

இந்தியா

நாட்டின் எரிபொருள் தேவை டிசம்பரிலும் அதிகரிப்பு

Updated : ஜன 10, 2021 | Added : ஜன 10, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி : நாட்டின் எரிபொருள் தேவை, தொடர்ந்து நான்காவது மாதமாக, கடந்த டிசம்பரிலும் அதிகரித்துள்ளது.ஊரடங்கு தளர்வுகளுக்கு பின், பொருளாதார செயல்பாடுகள் அதிகரித்து வருவதை அடுத்து, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் தேவையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இதன் தொடர்ச்சியாக, கடந்த டிசம்பரில், 11 மாதங்களில் இல்லாத வகையில், தேவை அதிகரித்துள்ளது. இருப்பினும்,

புதுடில்லி : நாட்டின் எரிபொருள் தேவை, தொடர்ந்து நான்காவது மாதமாக, கடந்த டிசம்பரிலும் அதிகரித்துள்ளது.



latest tamil news



ஊரடங்கு தளர்வுகளுக்கு பின், பொருளாதார செயல்பாடுகள் அதிகரித்து வருவதை அடுத்து, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் தேவையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இதன் தொடர்ச்சியாக, கடந்த டிசம்பரில், 11 மாதங்களில் இல்லாத வகையில், தேவை அதிகரித்துள்ளது. இருப்பினும், கொரோனாவுக்கு முந்தைய நிலையுடன் ஒப்பிடும்போது, இது, 2 சதவீதம் குறைவாகும்.


latest tamil news



இது குறித்து, பெட்ரோலிய துறை அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:பெட்ரோலிய பொருட்களுக்கான தேவை, டிசம்பர் மாதத்தில், அதற்கு முந்தைய ஆண்டுடிசம்பருடன் ஒப்பிடும்போது குறைந்துள்ளது. இருப்பினும், கடந்த நவம்பர் மாதத்துடன்ஒப்பிடும்போது அதிகரித்துள்ளது. பெட்ரோலின் தேவை, கடந்த செப்டம்பரில், கொரோனா காலத்துக்கு முந்தைய நிலைக்கு திரும்பிவிட்டாலும், டீசல், அக்டோபரில் தான் திரும்பியது.


latest tamil news


ஆனாலும், நவம்பர், டிசம்பர் மாதங்களில் சரிவைக் கண்டுள்ளது. டிசம்பரில், டீசல் தேவை, 2.7 சதவீதம் சரிந்துள்ளது. சமையல் எரிவாயுவை பொறுத்தவரை, டிசம்பரில், 7.4 சதவீதம் அதிகரித்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-ஜன-202113:19:15 IST Report Abuse
தமிழ் விலையை சென்சுரிக்கு ஏத்தாப்போறாங்கோ.
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
10-ஜன-202108:05:30 IST Report Abuse
g.s,rajan பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருளுக்கு மாற்றாக வேறு விதத்தில் எரிபொருளைக் கண்டுபிடிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் இந்தியாவில் எரிபொருளுக்கு மாநில அரசாங்கம் மற்றும் மத்திய அரசாங்கம் ஏகப்பட்ட வரிகளை விதித்து பொது மக்களை சாமானிய மக்களை போட்டு வாட்டி வதைப்பது வாடிக்கையாகிவிட்டது .மக்கள் ஏற்கனவே வருமானம் போதாமல் தடுமாறுகின்றனர் .விலைவாசியும் தாறுமாறாக விண்ணை முட்டி வருவதால் முழி பிதுங்கி செய்வது அறியாமல் திகைத்து நிற்கின்றனர் . ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
Cancel
10-ஜன-202107:40:33 IST Report Abuse
ஆரூர் ரங் எத்தனை விலையேறினாலும் வாகனம் மற்றும் பெட்ரோல் வாங்குவது 👍🏻கூடிக்கொண்டுதான் வருகிறது .மற்றபடி உணவுப்பொருள் விலையுயர்வுக்கு இது முக்கிய காரணமில்லை. அரசியல் தாதா😡க்களின் மாமூல் மற்றும் இடைத்தரகர்களே 99 விழுக்காடு காரணம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X