ஸ்ரீவில்லிபுத்துார் : மாவட்டத்தில் பல்வேறு நகர்,கிராமங்களில் சிதைந்தும் பெயர்ந்தும் எப்போது வேண்டுமானாலும் இடியும் நிலையில் உள்ள பழமையான பயணியர் நிழற்குடைகளை அகற்றி விட்டு புதிய நிழற்குடைகள் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மாவட்டத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள், கிராம சாலைகளில் பொதுமக்கள் பயன்பாட்டிறகாக நிழற்குடைகள் அமைக்கபட்டுள்ளன. ஒவ்வொரு ஐந்து ஆண்டு காலத்திலும் ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் ஊராட்சிகள் சார்பிலும் பயணியர் நிழற்குடைகள் பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கபடுகிறது.
அதிலும் சமீபகாலமாக கட்டப்படும் நிழற்குடைகளில் டைல்ஸ்கள் பதிக்கபட்டு இருக்கை வசதிகளும் செய்யபட்டுள்ளன. மாற்றுதிறனாளிகள் பயன்படுத்த வசதியாக சாய்வுதள நடைமேடையும் அமைக்கபடுகிறது. அதிகளவில் மக்கள் வந்து செல்லும் இடங்களில் கட்டப்பட்டுள்ள நிழற்குடைகளில் வால்போஸ்டர் ஒட்டி அசிங்கபடுத்துகின்றனர். இதனால் அங்கு நிற்கவோ, உட்காரவோ மக்கள் தயங்குகின்றனர்.
கிராமப்புறங்களில் செங்கல்கள் சிதைந்து எலும்புக்கூடாக இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதற்கு பயந்து கிராம மக்கள் 10 அடிதுாரம் தள்ளியே நிற்கின்றனர். அறியாதவர்கள் அங்கு உட்காரும்போது உயிர்பலி அபாயத்திற்கு ஆளாகும்நிலை உள்ளது. இது போன்ற நிழற்குடைகளை சீரமைக்க அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE