பாலக்கோட் தாக்குதலில் 300 பேர் பலி முதல் முறையாக பாகிஸ்தான் ஒப்புதல்

Updated : ஜன 10, 2021 | Added : ஜன 10, 2021 | கருத்துகள் (60)
Share
Advertisement
இஸ்லாமாபாத் : பாலக்கோட்டில், இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில், 300க்கும்அதிகமானோர் இறந்ததாக, பாகிஸ்தான் தரப்பு, முதல் முறையாக தெரிவித்துள்ளது.ஜம்மு - காஷ்மீரில் உள்ள புல்வாமாவில், 2019ல், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற, ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த, 40 வீரர்கள் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு

இஸ்லாமாபாத் : பாலக்கோட்டில், இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில், 300க்கும்அதிகமானோர் இறந்ததாக, பாகிஸ்தான் தரப்பு, முதல் முறையாக தெரிவித்துள்ளது.latest tamil news2019 பிப்ரவரியில் ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் மரணமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய விமானப்படை, பாகிஸ்தானின் பாலக்கோட் பகுதியில் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியது. இதில் பயங்கரவாதிகள் பலர் இறந்ததாக இந்திய விமானப்படை கூறியது. ஆனால், அதை பாகிஸ்தான் மறுத்து வந்தது. ஒருவர் கூட பலியாகவில்லை. மணல் பகுதியில்தான் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறியது. இந்நிலையில், பாகிஸ்தானின் முன்னாள் தூதரக அதிகாரி ஆஹ்கா ஹலாலி Agha Hilaly, பாலக்கோட் தாக்குதல் பற்றி டிவி விவாத நிகழ்ச்சியில் பேசினார். இந்திய விமானப்படை தாக்குதலில் 300க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். எல்லையில் நிலைமை மோசமாகிவிடக்கூடாது என்பதற்காக, யாரும் பலியாகவில்லை என்று அப்போது பொய் சொல்லப்பட்டது என்று ஹிலாலி கூறியுள்ளார்.

ஜம்மு - காஷ்மீரில் உள்ள புல்வாமாவில், 2019ல், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற, ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த, 40 வீரர்கள் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய விமானப்படையின் விமானங்கள், பாகிஸ்தானின் பாலக்கோட் பகுதியில்தாக்குதல் நடத்தின. இதில், பலர் இறந்ததாக, இந்திய விமானப்படை தெரிவித்தது.பாகிஸ்தான் ராணுவமும், அரசும், இந்த தகவலை தொடர்ந்து மறுத்து வந்தன.


latest tamil news'இந்த தாக்குதலில் ஒருவர் கூட பலியாகவில்லை; வெறும் மணல் பகுதியில் தான், இந்திய விமானப்படை தாக்குதல் நடத்திச் சென்றது' என, தொடர்ந்து கூறி வந்தன. பாகிஸ்தான் அரசு கூறியதை, இந்தியாவில் உள்ள சில எதிர்க்கட்சி தலைவர்களும் ஆமோதித்தனர். இந்நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் துாதரக அதிகாரி ஆஹா ஹிலாலே, பாகிஸ்தானின்,'டிவி' சேனல் ஒன்றின் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றார். இவர் எப்போதும், பாகிஸ்தான்ராணுவத்தை ஆதரித்து பேசுவது வழக்கம்.


latest tamil newsஇந்த நிகழ்ச்சியில் பாலகோட்டில், இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல் பற்றி அவர் கூறியதாவது: இந்திய விமானப்படை தாக்குதலில், 300க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். யாரும் பலியாகவில்லை என, அப்போது கூறியது பொய். எல்லையில் நிலைமை மோசமாகி விடக் கூடாது என்பதற்காக அப்படி சொல்லப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (60)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Prakash Srinivasan - chennai,இந்தியா
11-ஜன-202100:09:28 IST Report Abuse
Prakash Srinivasan Don't excited.
Rate this:
Cancel
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
10-ஜன-202121:17:36 IST Report Abuse
Chowkidar NandaIndia என்னடா இது. அன்று இதெல்லாம் நாடகம், தேர்தல் விளம்பரம் என்று ஓயாமல் பேசி ஆதாரமெல்லாம் கேட்ட இத்தாலி கட்சியினரும், அவர்கள் அடிப்பொடிகளும் முகத்தை இப்போது எங்கே வைத்துக்கொள்வார்களோ. என்னப்பா இது மங்கிகளுக்கு வந்த சோதனை.
Rate this:
Cancel
Sowdarpatti Rayarpadi Ramaswamy - Madurai,இந்தியா
10-ஜன-202120:50:01 IST Report Abuse
Sowdarpatti Rayarpadi Ramaswamy ஜெயில்ல இருக்கும்போதே புள்ள பெத்துக்கறாங்க ..(குடும்ப குடித்தன ஜெய்லா ).. .சீக்கிரமே இழப்பை ஈடு கட்டுவாங்க
Rate this:
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன்புள்ள குட்டிக்கார போதகர்கள் ஊழியம் செய்ய வில்லையா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X