பயங்கரவாதி மசூத் அசாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பாக்., நீதிபதி உத்தரவு

Updated : ஜன 10, 2021 | Added : ஜன 10, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
லாகூர்: கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மசூத் அசார் தலைமையில் காஷ்மீரின் புல்வாமா பகுதியில் தாக்குதல் நடத்திய ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசார். இவனை கைது செய்ய குர்கன்வாலா பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. இந்த நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நடாஷா நசீம் இதுகுறித்த வழக்கை விசாரித்தார். வரும் ஜனவரி 18-ம் தேதிக்குள் மசூத்
Arrest, Jaish_e_Mohammad_Chief, MasoodAzhar, PakistanCourt, ஜெய்ஷ்இமுகமது, மசூத் அசார், பாகிஸ்தான், நீதிமன்றம், ஆஜர்

லாகூர்: கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மசூத் அசார் தலைமையில் காஷ்மீரின் புல்வாமா பகுதியில் தாக்குதல் நடத்திய ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசார். இவனை கைது செய்ய குர்கன்வாலா பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
இந்த நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நடாஷா நசீம் இதுகுறித்த வழக்கை விசாரித்தார். வரும் ஜனவரி 18-ம் தேதிக்குள் மசூத் அசாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அவர் உத்தரவிட்டுள்ளார். மசூத் அசாரை குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தான் நீதிமன்றம் உள்நாட்டு பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டது. பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகளை அச்சுறுத்தி வரும் பயங்கரவாதிகளை அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டது. முன்னதாக மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ரஹ்மான் லக்விக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.


latest tamil news



சர்வதேச அளவில் தேடப்படும் பயங்கரவாதிகளில் ஒருவனான மசூத் அசார் மீது நடவடிக்கை எடுக்க பாக்., நீதிமன்றம் முனைந்துள்ளது. கடந்து 2019 மே மாதம் ஐ.நா., தலைமை மசூத் அசாரை உலக பயங்கரவாதியாக அறிவித்திருந்தது. இதுதொடர்பாக ஐநாவை டெல்லி மத்திய அரசு முன்னதாக அணுகியது.
பயங்கரவாத செயல்கள் மட்டுமல்லாமல் ஆயுத விற்பனையிலும் மசூத் அசார் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. கடந்த 1999ம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் பயணிகளை விடுவிக்க இந்திய அரசு மசூத் அசாரை விடுவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mathimandhiri - chennai,இந்தியா
10-ஜன-202121:20:46 IST Report Abuse
mathimandhiri இவனுக்கு "சிறை i" என்ற பெயரில் ஒரு சொர்க புரியை அங்கு அமைத்துக் கொடுத்து விட்டு அவன் எப்போதும் போலவே தன்னுடைய ராஜ்ஜியத்தை அதாவது இந்தியாவை சீர்குலைக்கும் வேலைகளில் இன்னும் மும்முரமாக செயல் பட வசதி செய்து கொடுப்பான் பாக் மூர்க்கன். இது தான் உண்மை.. ஊர் உலகத்துக்கு " அவனுக்கு இத்தனை ஆண்டுகள் சிறை " என்று சும்மா உதார் நியூஸைக் கொடுத்து விட்டு ஐ.நா நடவடிக்கைகளிலிருந்தும் தப்புவான். அமெரிக்காவிடம் மறுடியும் "பயங்கரவாத த்தை கட்டுப்படுத்த"நிதி பெற்றுக் கொள்வான்.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
10-ஜன-202121:07:52 IST Report Abuse
Ramesh Sargam "யார் காதில் பூ சொருகுகிறீர்கள்"?
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
10-ஜன-202121:07:33 IST Report Abuse
Ramesh Sargam "ஒரு நாடகமன்றோ நடக்குது".
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X