ஈரோடு: எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 வகுப்புக்காக, 394 பள்ளிகளில், 391 பள்ளிகளை திறக்க, ஈரோடு மாவட்ட பெற்றோர், ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நடப்பாண்டில் இதுவரை பள்ளிகளை திறக்காமல், ஆன்லைனில் வகுப்பு நடக்கிறது. வரும், 18ம் தேதி முதல், எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும், பள்ளிகளை திறக்க அரசு உத்தேசித்துள்ளது. இதுகுறித்து கடந்த, 6ம் தேதி முதல், 8ம் தேதி வரை, மாணவர்களின் பெற்றோரிடம் கருத்து கேட்கப்பட்டது. இதில் பெரும்பாலானோர், பள்ளி திறக்க ஆதரவு தெரிவித்துள்ளதாக, பள்ளி கல்வி துறையினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: மாவட்டத்தில், எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2வை பொறுத்தவரை, அரசு பள்ளி, 186, அரசு உதவி பெறும் பள்ளிகள், 30ம் முழுமையாக பள்ளிகளை திறக்க சம்மதம் தெரிவித்துள்ளன. மெட்ரிக், சுய நிலை பள்ளிகளை பொறுத்தவரை, 142ல், 140 பள்ளிகளும், சி.பி.எஸ்.இ., மற்றும் இதர பள்ளி அளவில், 36 பள்ளிகளில், 35 பள்ளிகள், அதாவது மாவட்டத்தில் உள்ள, 394 பள்ளிகளில், 391 பள்ளிகளின் பெற்றோர், 18ல் பள்ளிகளை திறக்க சம்மதித்துள்ளனர். இதுகுறித்த தகவல், பள்ளி கல்வி துறை இயக்குனரகத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE