பவானிசாகர்: நீர் பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையால், பவானிசாகர் அணைக்கு வரத்து அதிகரித்துள்ளது. பவானிசாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதியில், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால், நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம், 638 கனஅடியாக இருந்த நீர்வரத்து, 4,766 கன அடியாக நேற்று மாலை அதிகரித்தது. அதேசமயம் அணை நீர்மட்டம், 95.74 அடி, நீர் இருப்பு, 25.5 டி.எம்.சி., யாக இருந்தது. குடிநீருக்காக, 100 கனஅடி தண்ணீர் பவானி ஆற்றில் திறக்கப்படுகிறது. பாசனத்துக்காக கீழ்பவானி வாய்க்காலில், 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE