பொது செய்தி

தமிழ்நாடு

சாராயம் இல்லாத கிராமத்தில் முப்பெரும் விழா: குற்றத்தை தடுக்க மக்கள் ஒத்துழைக்க அறிவுரை

Added : ஜன 10, 2021
Share
Advertisement
சேலம்: சாராயம் இல்லாத கிராமத்தில் நடந்த முப்பெரும் விழாவில், குற்றங்களை தடுக்க, மக்கள் ஒத்துழைக்க, போலீஸ் கமிஷனர் அறிவுறுத்தினார்.சேலம் அருகே உள்ள, வரகம்பாடியில், போலீசார் ஏற்படுத்திய விழிப்புணர்வு, தொழில் தொடங்க, கடனுதவி பெற்றுத்தந்து, மக்களை நல்வழிப்படுத்தியதால், சாராயம் இல்லாத கிராமமாக மாறியுள்ளது. அங்கு, மாநகர போலீசார் சார்பில், இலவச மருத்துவ முகாம்,

சேலம்: சாராயம் இல்லாத கிராமத்தில் நடந்த முப்பெரும் விழாவில், குற்றங்களை தடுக்க, மக்கள் ஒத்துழைக்க, போலீஸ் கமிஷனர் அறிவுறுத்தினார்.


சேலம் அருகே உள்ள, வரகம்பாடியில், போலீசார் ஏற்படுத்திய விழிப்புணர்வு, தொழில் தொடங்க, கடனுதவி பெற்றுத்தந்து, மக்களை நல்வழிப்படுத்தியதால், சாராயம் இல்லாத கிராமமாக மாறியுள்ளது. அங்கு, மாநகர போலீசார் சார்பில், இலவச மருத்துவ முகாம், மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் வழங்கல், கிராம விழிப்புணர்வு காவலர்கள் அறிமுகம் என, முப்பெரும் விழா, நேற்று நடந்தது. போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், மருத்துவ முகாமை தொடங்கி வைத்து, நோட்டு, புத்தகம் வழங்கிய பின் பேசியதாவது: மக்கள், ஆரோக்கியமாக வாழ, மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. அவர்கள் பாதுகாப்பு முக்கியம் என்பதால், பிரச்னை, குறைகள் தெரிவிக்க, கிராம விழிப்புணர்வு காவலர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம், உங்கள் கோரிக்கையை தெரிவித்தால், அதன் மீது, நடவடிக்கை எடுக்கப்படும். குற்றங்களை தடுக்க, மக்கள், தகவல் கொடுக்க வேண்டும். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, அசம்பாவிதத்தை, முன்னதாக அறிந்து தடுக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார். வரகம்பாடி ஊராட்சி தலைவர் கவிதா, மக்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X