பொது செய்தி

தமிழ்நாடு

இணைய வழி பேச்சு திறன் போட்டி: பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு

Added : ஜன 10, 2021
Share
Advertisement
சேலம்: சேலம், நாலெட்ஜ் பொறியியல் கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: 'உனக்குள் ஒரு கலாம் - 2021' எனும், இணைய வழி பேச்சு திறன் போட்டி நடத்தப்பட உள்ளது. இதற்கான அழைப்பிதழ் வெளியிடும் விழா நடந்தது. அதில், கல்லூரி முதல்வர் சீனிவாசன், நிர்வாகத்தினர் முன்னிலையில், அழைப்பிதழை வெளியிட, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் பெற்றுக்கொண்டனர். இப்போட்டியில், ஒன்பதாம் வகுப்பு முதல்,

சேலம்: சேலம், நாலெட்ஜ் பொறியியல் கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: 'உனக்குள் ஒரு கலாம் - 2021' எனும், இணைய வழி பேச்சு திறன் போட்டி நடத்தப்பட உள்ளது. இதற்கான அழைப்பிதழ் வெளியிடும் விழா நடந்தது. அதில், கல்லூரி முதல்வர் சீனிவாசன், நிர்வாகத்தினர் முன்னிலையில், அழைப்பிதழை வெளியிட, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் பெற்றுக்கொண்டனர். இப்போட்டியில், ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள் பங்கேற்கலாம். ஒரு பள்ளியில் இருந்து, குறைந்தது, 25 மாணவ, மாணவியர் பங்கேற்க வேண்டும். சுயசார்பு இந்தியா, தூய்மை மற்றும் பசுமை இந்தியா, இந்தியாவிற்கான எனது கண்டுபிடிப்பு என்ற தலைப்புகளில், போட்டி நடக்கும். தமிழக அளவில் நடத்தப்பட உள்ள நிகழ்ச்சியில், 5 லட்சம் ரூபாய் பரிசு, நாலெட்ஜ் கல்வி குழுமத்தின், 70 லட்சம் ரூபாய்க்கான கல்வி உதவித்தொகை, மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. மாணவர்கள், ஏதேனும் ஒரு தலைப்பில், 3 நிமிடம் பேசிய வீடியோவை, இணைய வழியாக, https://bit.ly/kiotkalaminyoulevel1 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இப்போட்டி குறித்த வழிமுறையை அறிய, வரும், 24ல் நடக்க உள்ள, இலவச இணைய வழி நிகழ்ச்சியில் பங்கேற்கலாம். அதற்கு, முன்பதிவு அவசியம் என்பதால், 97864 81828, 95669 98489, 97861 23438 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X