சேலம்: பொங்கல் நெரிசலை சமாளிக்க, சென்னை, சென்ட்ரல் - கோவை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சென்னை, சென்ட்ரல் - கோவை விழாக்கால சிறப்பு ரயில், ஜன., 13 இரவு, 11:30 மணிக்கு, சென்னையிலிருந்து புறப்பட்டு, அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு வழியே, அடுத்தநாள் காலை, 8:00 மணிக்கு கோவையை அடையும். மறுமார்க்கத்ததில், ஜன., 17 இரவு, 8:00 மணிக்கு கோவையிலிருந்து கிளம்பி, மறுநாள் காலை, 4:30 மணிக்கு சென்னையை அடையும். முன்பதிவு பயணியர் மட்டும் அனுமதிக்கப்படுவர். இதற்கான முன்பதிவு, இன்று காலை, 8:00 மணிக்கு தொடங்குகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE