பொது செய்தி

தமிழ்நாடு

வங்கா நரியை பிடித்தால் சிறை: மாவட்ட வன அலுவலர் எச்சரிக்கை

Added : ஜன 10, 2021
Share
Advertisement
ஆத்தூர்: வங்கா நரியை பிடித்து, ஜல்லிக்கட்டு விழா நடத்தினால், சிறை தண்டனை வழங்கப்படும் என, மாவட்ட வன அலுவலர் எச்சரித்துள்ளார்.சேலம் மாவட்டத்தில், ஆத்தூர், நரசிங்கபுரம், பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பாடி, ரங்கனூர், கொட்டவாடி, பெரியகிருஷ்ணாபுரம், படையாச்சியூர், மல்லியக்கரை சுற்று வட்டார கிராமங்களில், காணும் பொங்கல் பண்டிகையின்போது, வங்கா நரி ஜல்லிக்கட்டு நடத்தப்படும்.

ஆத்தூர்: வங்கா நரியை பிடித்து, ஜல்லிக்கட்டு விழா நடத்தினால், சிறை தண்டனை வழங்கப்படும் என, மாவட்ட வன அலுவலர் எச்சரித்துள்ளார்.


சேலம் மாவட்டத்தில், ஆத்தூர், நரசிங்கபுரம், பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பாடி, ரங்கனூர், கொட்டவாடி, பெரியகிருஷ்ணாபுரம், படையாச்சியூர், மல்லியக்கரை சுற்று வட்டார கிராமங்களில், காணும் பொங்கல் பண்டிகையின்போது, வங்கா நரி ஜல்லிக்கட்டு நடத்தப்படும். இதற்காக, வனப்பகுதிக்கு சென்று, வங்கா நரியை பிடித்து வந்து, அதன் காலில் கயிற்றை கட்டி, கோவிலை சுற்றி விரட்டி விடுவர். விழாவுக்கு பின், திருப்பி வனப் பகுதியில் விடுவர். ஆனால், வங்கா நரி ஜல்லிக்கட்டு நடத்த, 2011 முதல், வனத்துறை தடை விதித்துள்ளது. தற்போது, ஆத்தூர், வாழப்பாடி பகுதி கிராமங்களில், ஆத்தூர், வாழப்பாடி, கருமந்துறை, தம்மம்பட்டி வனச்சரக சிறப்பு கண்காணிப்பு குழுவினர், 'வங்கா நரி பிடித்து விழா நடத்த வேண்டாம்' என எச்சரித்து வருகின்றனர்.

இதுகுறித்து, சேலம் மாவட்ட வனஅலுவலர் முருகன் கூறியதாவது: மாவட்ட வனப்பகுதியில், வங்கா நரி இனம் அரிதாகி வருவதால், வங்கா நரி, நரி உள்ளிட்ட உயிரினங்களை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வங்கா நரி பட்டியல் விலங்காக உள்ளதால், இவற்றை பிடித்து, விழா நடத்தக்கூடாது. விதிமீறுவோர் மீது, வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி, அதிகபட்ச அபராதம், கடும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வழக்கில், ஏழு ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X