சேலம்: மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, சனிதோறும், நடைபயிற்சியின் போது, பாதையில் உள்ள பிளாஸ்டிக் கழிவை அகற்றும், 'சேலம் பிளாகிங்' எனும் நிகழ்ச்சி, நேற்று, பல்வேறு பகுதிகளில் நடந்தது. அதில், பல்வேறு சங்கங்கள், அமைப்புகள் சார்பில், 680 தன்னார்வலர் பங்கேற்று, 735 கிலோ பிளாஸ்டிக் கழிவை அகற்றினர். கொண்டலாம்பட்டி மண்டலம், புலிக்குத்தி தெருவில் நடந்த நிகழ்ச்சியில், கமிஷனர் ரவிச்சந்திரன் பங்கேற்றார். அப்பகுதியில், சுகாதார கேடு விளைவிக்கும்படி, குப்பையை கழிவுநீர் கால்வாயில் கொட்டிய சிற்றுண்டி கடை உரிமையாளரிடம், 1,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. இதுகுறித்து, கமிஷனர் ரவிச்சந்திரன் கூறுகையில், ''குப்பையில்லா மாநகரமாக, அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். குப்பையை, தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்காமல், கழிவுநீர், தெருக்களில் கொட்டும், வணிக நிறுவனத்தினர், குடியிருப்பினருக்கு அபராதம் விதித்து, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE