பொது செய்தி

தமிழ்நாடு

காலிப்பணியிடங்களை நிரப்ப கிராம வங்கி ஊழியர் கோரிக்கை

Added : ஜன 10, 2021
Share
Advertisement
சேலம்: கிராம வங்கிகளில் உள்ள காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப கோரிக்கை எழுந்துள்ளது.தமிழ்நாடு கிராம வங்கி அலுவலர்கள், ஊழியர் சங்க முதல் மாநாடு, சேலத்தில், நேற்று நடந்தது. அதில், அகில இந்திய கிராம வங்கி ஊழியர் சங்கத்தலைவர் ராஜீவன், பொதுச்செயலர் வெங்கடேஸ்வர ரெட்டி பேசினர். இதில், அலுவலர் சங்கத்தலைவர் பத்மநாபன், பொதுச்செயலர் அறிவுடை நம்பி, ஊழியர் சங்க தலைவர் சுரேஷ் உள்பட,

சேலம்: கிராம வங்கிகளில் உள்ள காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப கோரிக்கை எழுந்துள்ளது.


தமிழ்நாடு கிராம வங்கி அலுவலர்கள், ஊழியர் சங்க முதல் மாநாடு, சேலத்தில், நேற்று நடந்தது. அதில், அகில இந்திய கிராம வங்கி ஊழியர் சங்கத்தலைவர் ராஜீவன், பொதுச்செயலர் வெங்கடேஸ்வர ரெட்டி பேசினர். இதில், அலுவலர் சங்கத்தலைவர் பத்மநாபன், பொதுச்செயலர் அறிவுடை நம்பி, ஊழியர் சங்க தலைவர் சுரேஷ் உள்பட, மாநிலம் முழுதும் இருந்து, திரளானோர் பங்கேற்றனர். இதையடுத்து, வெங்கடேஸ்வர ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது: நாடு முழுதும், 686 மாவட்டங்களில், 43 கிராம வங்கிகள், பல்வேறு கிளைகளுடன் செயல்படுகின்றன. மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை வங்கிகளின் கீழ் இயங்குகின்றன. இதில், லாபம் ஈட்டக்கூடிய வங்கி, 'ஏ' பிரிவாகவும், சராசரி வங்கிகளை, 'பி' ஆகவும், நஷ்டத்தில் இயங்கும் வங்கியை, 'சி' ஆகவும், ரிசர்வ் வங்கி பிரித்துள்ளன. 'சி' பிரிவு வங்கிகளை, பொதுத்துறை வங்கிகளுடன் இணைக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதை எதிர்க்கிறோம். கிராம வங்கி என்பது, மக்கள் சேவையாற்ற தொடங்கப்பட்டது. அதில், லாபநோக்கத்தை எதிர்பார்ப்பது தவறு. கிராம வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளக்கூடாது. அதேபோல், கிராம வங்கிகளில் உள்ள காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். இல்லாவிட்டால், அகில இந்திய அளவில் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X