சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாட்டி மறைவால் வேதனை: போலீஸ்காரர் தற்கொலை முயற்சி

Added : ஜன 10, 2021
Share
Advertisement
சேலம்: சென்னை போலீஸ்காரர், சேலத்தில், தற்கொலைக்கு முயன்றார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தை சேர்ந்த முருகன் மகன் அருண்பாண்டியன், 25. இவர், சென்னை, ஆயுதப்படை போலீஸ்காரர். சில மாதங்களுக்கு முன், மத்திய பிரதேச மாநிலத்துக்கு, பாதுகாப்பு பணிக்கு சென்றார். 20 நாளுக்கு முன், அவரது பாட்டி இறந்துவிட்டார். இறுதி சடங்கில், அருண்பாண்டியன் பங்கேற்க இயலவில்லை. தாயை இழந்து, பாட்டி

சேலம்: சென்னை போலீஸ்காரர், சேலத்தில், தற்கொலைக்கு முயன்றார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தை சேர்ந்த முருகன் மகன் அருண்பாண்டியன், 25. இவர், சென்னை, ஆயுதப்படை போலீஸ்காரர். சில மாதங்களுக்கு முன், மத்திய பிரதேச மாநிலத்துக்கு, பாதுகாப்பு பணிக்கு சென்றார். 20 நாளுக்கு முன், அவரது பாட்டி இறந்துவிட்டார். இறுதி சடங்கில், அருண்பாண்டியன் பங்கேற்க இயலவில்லை. தாயை இழந்து, பாட்டி அரவணைப்பில் வளர்ந்த போலீஸ்காரருக்கு, பாட்டி மறைவு, துக்கத்தை ஏற்படுத்தியது. அந்த வேதனையில் தவித்த அவர், விடுமுறை எடுத்துக்கொண்டு, நேற்று முன்தினம், சேலம் வந்தார். பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கியவர், தற்கொலைக்கு முயன்று விஷம் குடித்தார். அவரது நண்பர் மூலம், தகவல் அறிந்து, டவுன் போலீசார், நேற்று காலை, 11:00 மணிக்கு, அவரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர், கவலைக்கிடமான நிலையில் உள்ளதால், குடும்பத்தினருக்கு, தகவல் தெரிவித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X