பொது செய்தி

தமிழ்நாடு

உழவு கருவி தயாரிப்பு பணியில் வடமாநில தொழிலாளர்கள் தீவிரம்

Added : ஜன 10, 2021
Share
Advertisement
நல்லம்பள்ளி: தர்மபுரியில், வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள், விவசாய உழவு கருவிகள் தயாரிக்கும் பணியில், தீவிரம் காட்டி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில், பருவ மழை மற்றும் அடுத்தடுத்து தொடர்ந்த புயல் மழையால், மாவட்டம் முழுவதுமுள்ள நீர்நிலைகள் நிரம்பின. இதனால், பயிர் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும், விவசாயத்துக்கு தேவைப்படும் உழவு

நல்லம்பள்ளி: தர்மபுரியில், வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள், விவசாய உழவு கருவிகள் தயாரிக்கும் பணியில், தீவிரம் காட்டி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில், பருவ மழை மற்றும் அடுத்தடுத்து தொடர்ந்த புயல் மழையால், மாவட்டம் முழுவதுமுள்ள நீர்நிலைகள் நிரம்பின. இதனால், பயிர் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும், விவசாயத்துக்கு தேவைப்படும் உழவு கருவிகளை, புதியதாக வாங்குவதிலும், அவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளியில், வட மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் தங்கி, மண்வெட்டி, களைகொத்தி, கதிர் அருவாள், உளி, கோடாரி, கொடுவாள், சல்லடை உள்ளிட்ட, ஏராளமான உழவு கருவிகளை, நேரடியாக தயாரித்து விற்பனை செய்கின்றனர். இவை, தரமான முறையிலும், விலை குறைவாகவும் இருப்பதாலும், இவற்றை விவசாயிகள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். இக்கருவிகளை கொண்டு, சாகுபடி செய்த வயலில், களை எடுப்பது, வாய்க்கால் அமைப்பது உள்ளிட்ட, பல்வேறு உழவுப்பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், வடமாநிலத்தை சேர்ந்தவர்கள், விவசாய உழவு கருவிகள் தயாரிப்பதில், தீவிரம் காட்டி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X