கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாவட்ட பேரவை கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாவட்ட பேரவை கூட்டம்

Added : ஜன 10, 2021
Share
தர்மபுரி: தர்மபுரியில், தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின், தர்மபுரி மாவட்ட பேரவை கூட்டம், மாவட்ட துணைத்தலைவர் அனுமன் தலைமையில் நடந்தது. இதில், மாநில பொதுச்செயலாளர் செல்லையா பேசியதாவது: கூட்டுறவுத்துறையில், இளநிலை ஆய்வாளர் பதவியிலிருந்து, முதுநிலை ஆய்வாளர் பதவி உயர்வில், 3:1 என்ற விகிதாச்சார அளவை ரத்து செய்து, அனைத்து இளநிலை ஆய்வாளர்களுக்கும், பதவி

தர்மபுரி: தர்மபுரியில், தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின், தர்மபுரி மாவட்ட பேரவை கூட்டம், மாவட்ட துணைத்தலைவர் அனுமன் தலைமையில் நடந்தது. இதில், மாநில பொதுச்செயலாளர் செல்லையா பேசியதாவது: கூட்டுறவுத்துறையில், இளநிலை ஆய்வாளர் பதவியிலிருந்து, முதுநிலை ஆய்வாளர் பதவி உயர்வில், 3:1 என்ற விகிதாச்சார அளவை ரத்து செய்து, அனைத்து இளநிலை ஆய்வாளர்களுக்கும், பதவி உயர்வு வழங்க, விதி திருத்தம் செய்ய வேண்டும். பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர் ஆகியோருக்கு, இளநிலை உதவியாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும். சுருக்கெழுத்து, தட்டச்சர் நிலை, 3ல் உள்ளோருக்கு, நிபந்தனைகளை தளர்த்தி, இளநிலை ஆய்வாளராக பதவி உயர்வு வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், பிப்., 2ல் நடத்த உள்ள, காலவரையற்ற மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டத்தில், கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் முழுமையாக பங்கேற்று, போராட்டத்தை வெற்றிபெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக நடந்த நிர்வாகிகள் தேர்வில், மாவட்ட தலைவராக அனுமன், செயலாளராக சரவணன், பொருளாளராக குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுருளிநாதன் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X