சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி பலி

Added : ஜன 10, 2021
Share
Advertisement
காரிமங்கலம்: வீட்டின் சுவர் இடிந்து விழுந்து, மூதாட்டி பலியானது குறித்து, காரிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர். தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த தும்பலஹள்ளியை சேர்ந்தவர் பார்வதி, 65; இவர், நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல், தன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். தொடர் மழையால் சேதமான இவரது வீட்டின் சுவர், நேற்று முன்தினம் இரவு இடிந்து, பார்வதி மீது விழுந்துள்ளது.

காரிமங்கலம்: வீட்டின் சுவர் இடிந்து விழுந்து, மூதாட்டி பலியானது குறித்து, காரிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர். தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த தும்பலஹள்ளியை சேர்ந்தவர் பார்வதி, 65; இவர், நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல், தன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். தொடர் மழையால் சேதமான இவரது வீட்டின் சுவர், நேற்று முன்தினம் இரவு இடிந்து, பார்வதி மீது விழுந்துள்ளது. இது குறித்து, அப்பகுதியினர், காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து இடிபாடுகளை அகற்றி பார்த்தபோது, சுவர் இடிந்து விழுந்ததில், மூதாட்டி பார்வதி பலியானது தெரிய வந்தது. இதுகுறித்து, காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X