தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், அனுமதியின்றி மதுபானம், குட்கா விற்ற, 57 பேரை, போலீசார் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தின், பல்வேறு பகுதிகளில் அனுமதியின்றி மதுபானம் மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை தொடர்கிறது. மாவட்ட எஸ்.பி., பிரவேஸ்குமாரின் உத்தரவின்படி, மாவட்டம் முழுவதும் போலீசார், இதுகுறித்து தீவிர ரோந்து மற்றும் சோதனையில் ஈடுபட்டனர். இதில், குட்கா விற்றதாக பென்னாகரம் உட்கோட்டத்தில், 18 பேர், அரூர் உட்கோட்டத்தில், 12 பேர், பாலக்கோட்டில் மூன்று பேர், தர்மபுரியில் இருவர் என, மொத்தம், 41 பேரை, போலீசார் கைது செய்தனர். இதேபோன்று, மாவட்டத்தில் அனுமதியின்றி மதுபானம் விற்ற, 16 பேரை போலீசார் கைது செய்தனர். மாவட்டத்தில், அனுமதியின்றி குட்கா, மதுபானம் விற்ற மொத்தம், 57 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE