சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொப்பூர் இரட்டை பாலத்தில் ஆக்சிஜன் லாரி கவிழ்ந்து விபத்து

Added : ஜன 10, 2021
Share
Advertisement
தொப்பூர்: தொப்பூர், இரட்டை பாலத்தில் லாரிகள் மோதிய விபத்தில், ஆக்சிஜன் லாரி கவிழ்ந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.மும்பையில் இருந்து சேலத்துக்கு, மருத்துவமனைக்கு பயன்படுத்தும் ஆக்சிஜன் ஏற்றிய ஈச்சர் லாரி ஒன்று வந்தது. மும்பையை சேர்ந்த அப்பர அஹமது, 50, என்பவர் ஓட்டி வந்தார். நேற்று காலை, 7:00 மணிக்கு, அந்த லாரி தொப்பூர், இரட்டை பாலம் அருகே சென்று கொண்டிருந்தது.

தொப்பூர்: தொப்பூர், இரட்டை பாலத்தில் லாரிகள் மோதிய விபத்தில், ஆக்சிஜன் லாரி கவிழ்ந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


மும்பையில் இருந்து சேலத்துக்கு, மருத்துவமனைக்கு பயன்படுத்தும் ஆக்சிஜன் ஏற்றிய ஈச்சர் லாரி ஒன்று வந்தது. மும்பையை சேர்ந்த அப்பர அஹமது, 50, என்பவர் ஓட்டி வந்தார். நேற்று காலை, 7:00 மணிக்கு, அந்த லாரி தொப்பூர், இரட்டை பாலம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, கோல்கட்டாவில் இருந்து, திருப்பூருக்கு துணி பண்டல் ஏற்றி வந்த லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, முன்னால், ஆக்சிஜன் ஏற்றிச்சென்ற லாரி மீது மோதியது. இதில், ஆக்சிஜன் சிலிண்டர் லாரி, இரட்டை பால தடுப்பு சுவர் மீது மோதி, சாலையில் கவிழ்ந்தது. லாரி டிரைவர் அப்பரஅஹமது படுகாயம் அடைந்தார். லாரியில் இருந்த சிலிண்டரில் இருந்து ஆக்சிஜன் வெளியேறியது. தகவலின்படி வந்த, தொப்பூர் போலீசார், ஆக்சிஜன் லாரியின் இடிபாடுகளில் சிக்கிய, டிரைவர் அப்பரஅஹமது மற்றும் துணி பாரம் ஏற்றிய லாரியை ஓட்டி வந்த, ஜார்கண்டை சேர்ந்த பயாஸ், 35, ஆகியோரை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து, லாரியில் ஆக்சிஜன் கசிவை நிறுத்த நடவடிக்கை எடுத்த போலீசார், இதுகுறித்து விசாரித்து வருகின்றனர். விபத்தால், அப்பகுதியில், ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X