சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மொபைல் போன் திருட்டு: கர்நாடகா வாலிபர் கைது

Added : ஜன 10, 2021
Share
Advertisement
ஓசூர்: ஓசூரில், சாப்ட்வேர் இன்ஜினியர் மொபைல்போனை திருடி சென்ற, கர்நாடகா மாநில வாலிபர் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வி.ஏ.கே., நகரை சேர்ந்தவர் கோபிநாத், 31, சாப்ட்வேர் இன்ஜினியர்; ஓசூர், மூக்கண்டப்பள்ளியில் உள்ள எம்.எம்., நகரில் தங்கி, பெங்களூருவில் வேலை தேடி வந்தார். கடந்த, 7 இரவு, சிப்காட் ஹவுசிங் காலனியிலுள்ள, அரசு குடியிருப்பு பகுதியில், பைக்கை நிறுத்தி

ஓசூர்: ஓசூரில், சாப்ட்வேர் இன்ஜினியர் மொபைல்போனை திருடி சென்ற, கர்நாடகா மாநில வாலிபர் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வி.ஏ.கே., நகரை சேர்ந்தவர் கோபிநாத், 31, சாப்ட்வேர் இன்ஜினியர்; ஓசூர், மூக்கண்டப்பள்ளியில் உள்ள எம்.எம்., நகரில் தங்கி, பெங்களூருவில் வேலை தேடி வந்தார். கடந்த, 7 இரவு, சிப்காட் ஹவுசிங் காலனியிலுள்ள, அரசு குடியிருப்பு பகுதியில், பைக்கை நிறுத்தி விட்டு கடைக்கு சென்றார். அப்போது அங்கு வந்த, மூன்று பேர் கொண்ட கும்பல், பைக்கிலிருந்த கோபிநாத்தின், 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மொபைல்போனை திருடிச்சென்றது. இது குறித்து, ஓசூர் சிப்காட் போலீசில் கோபிநாத் புகார் செய்தார். விசாரணையில், ஓசூரிலுள்ள சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்றி வரும், கர்நாடகா மாநிலம், சாமரஹள்ளி அடுத்த இஷாமுதாராவை சேர்ந்த முபாரக், 19, மற்றும் ஓசூரை சேர்ந்த நவீத், அல்லு ஆகியோர் மொபைல்போனை திருடியது தெரிந்தது. முபாரக்கை நேற்று முன்தினம் மாலை, கைது செய்த போலீசார், நவீத், அல்லுவை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X