சம்பவம் செய்தி

தமிழ்நாடு

யானை கூட்டம் துரத்தியதில் விவசாயிகள் 6 பேர் படுகாயம்

Added : ஜன 10, 2021
Share
Advertisement
ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே, யானை கூட்டம் துரத்தியதில், இரவில், தோட்ட காவலுக்கு சென்ற ஆறு விவசாயிகள், கீழே விழுந்து படுகாயமடைந்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனப்பகுதியிலுள்ள, வட்டவடிவுபாறை மற்றும் சூரப்பன் குட்டையில், 15க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. இவை, இரவில், அருகேயுள்ள விவசாய பயிர்களை நாசம் செய்து வருகின்றன. அனுமந்தபுரம், ஒசஹள்ளியில்

ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே, யானை கூட்டம் துரத்தியதில், இரவில், தோட்ட காவலுக்கு சென்ற ஆறு விவசாயிகள், கீழே விழுந்து படுகாயமடைந்தனர்.


கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனப்பகுதியிலுள்ள, வட்டவடிவுபாறை மற்றும் சூரப்பன் குட்டையில், 15க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. இவை, இரவில், அருகேயுள்ள விவசாய பயிர்களை நாசம் செய்து வருகின்றன. அனுமந்தபுரம், ஒசஹள்ளியில் அறுவடை செய்த ராகியை, விவசாய நிலங்களில் விவசாயிகள் குவித்து வைத்துள்ளனர். அங்கு, ஒசஹள்ளியை சேர்ந்த மாதேவன், 39, ராஜேந்திரன், 20, அனுமந்தபுரத்தை சேர்ந்த மல்லேஷ், 35, மல்லிகார்ஜூனன், 35, சிவசங்கரப்பா, 35, ரவி, 35, ஆகியோர், நேற்று முன்தினம் இரவு, காவலுக்கு சென்றனர். நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு, வனப்பகுதியிலிருந்து வெளியேறிய யானைகள், ஒசஹள்ளி மற்றும் அனுமந்தபுரத்திலுள்ள ராகி மற்றும் கரும்பு தோட்டங்களில் புகுந்து, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பயிர்களை நாசம் செய்தன. இவற்றை விரட்ட முயற்சித்தபோது, யானைகள் கூட்டம் அவர்களை விரட்டியது. இதில், மாதேவன், ராஜேந்திரன், மல்லேஷ், மல்லிகார்ஜூனன், சிவசங்கரப்பா, ரவி ஆகியோர், கீழே விழுந்து படுகாயமடைந்தனர். தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ள அவர்களை, தேன்கனிக்கோட்டை வனச்சரகர் சுகுமார், தளி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் சந்தித்து ஆறுதல் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X