கிருஷ்ணகிரி: பாகிஸ்தான் எல்லையில் நடந்த போரில், ஊனமுற்ற ராணுவ வீரருக்கு, ஐந்து லட்சம் ரூபாய் கருணை தொகையை, மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வழங்கினார். கிருஷ்ணகிரி மாவட்டம், பெத்தமேலுப்பள்ளியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். ராணுவ வீரரான இவர், கடந்த, 2016 நவ., 20ல், ஜம்மு காஷ்மீர் மாநிலம், ராஜோரி மாவட்டத்தில், பாகிஸ்தான் எல்லையில் நடந்த போரில், படுகாயம் ஏற்பட்டு ஊனமுற்றார். இவருக்கு, கார்கில் நிவாரண நிதியிலிருந்த, கருணை தொகையாக, ஐந்து லட்சம் ரூபாய் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த தொகைக்கான காசோலையை, கிருஷ்ணகிரி மாவட்ட அலுவலகத்தில் வைத்து, கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி, ராணுவ வீரர் கோவிந்தராஜூக்கு வழங்கினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE